×
 

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல... அதை செய்ய முடியாது... உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு...!

தமிழக வெற்றி கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நடத்தும் பிரச்சாரங்களில் அலைக்கடலென மக்கள் குவிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடத்திய மாநாடுகளில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே பார்க்க வேண்டும் எனவும் அக்கட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் குழந்தைகளுடன் மக்கள் வந்திருந்தனர். கரூர் நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்க தடை விதிக்க வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக வெற்றிக்கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்ப முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகம் அங்கீகாரத்தை ரத்து செய்து கூட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்க தடை கூறிய வழக்கில் தேர்தல் ஆணையம் இவ்வாறு தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அதுக்கு ஆள் இருக்காங்க… ஏன் நான் கேட்க கூடாதா? ஆத்திரமடைந்த வேல்முருகன்… சட்டமன்றத்திலேயே வாக்குவாதம்…!

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசும் டிஜிபியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கரூர் வழக்கு மற்றும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்கக் கூடிய அனைத்து வழக்குகளையும் ஒரே அமர்வு விசாரிக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கரூர் சம்பவம்... சிபிஐ அதிகாரிகளுடன் SIT அதிகாரி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share