×
 

தீயசக்தி திமுக!! மு.க. ஸ்டாலினை கடுப்பேத்த தவெக புது டெக்னிக்!! குழந்தைகளிடத்தில் பிரசாரம்!

சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க.,வை விமர்சிக்கும் வகையில் புதுவித பிரசாரத்தை த.வெ.க.,வினர் முன்னெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து “தி.மு.க. – த.வெ.க. இடையேதான் உண்மையான போட்டி” என்று கூறி வருகிறார். கட்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களைப் பயன்படுத்தி தி.மு.க.வுக்கு எதிரான பிரசாரத்தை த.வெ.க. தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

பொங்கல் பண்டிகையை சாக்காக வைத்து, மாவட்டம், ஒன்றியம், நகர அளவில் த.வெ.க. சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகளில் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் பெருந்திரளாக பங்கேற்கின்றனர். போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகளுடன் சேர்த்து பால், முட்டை, ரொட்டி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தலுக்கு முன்பே சொல்லிடுங்க! விசாரணையை முடிக்க கோரி வழக்கு!

ஆனால் இந்தப் பொருட்களை வழங்குவதற்கு முன்பு, குழந்தைகளிடம் ஒரு வசனத்தைச் சொல்ல வைக்கின்றனர். அந்த வசனம்: “ஓம் சக்தி, பராசக்தி, தி.மு.க. ஒரு தீயசக்தி”  

இதை குழந்தைகள் பத்து முறை சொன்ன பிறகே பால், முட்டை, ரொட்டி போன்றவற்றை வழங்குகின்றனர் என்று பல இடங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. பொருட்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் சிறுவர்கள் மூலம் தி.மு.க.வுக்கு எதிரான பிரசாரத்தை மிகத் திறம்பட முன்னெடுக்கின்றனர் த.வெ.க.வினர்.

இந்தப் பிரசார முறை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை “குழந்தைகளைப் பயன்படுத்தும் தவறான அரசியல்” என்று கண்டிக்கின்றனர். மற்றொரு தரப்பினர் “தேர்தல் காலத்தில் இதுபோன்ற புதிய பிரசாரங்கள் வழக்கமானவை” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், த.வெ.க.வின் இந்த புதிய வகை பிரசாரம் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: போராடுனா கஞ்சா CASE... போலீஸ் பகிரங்க மிரட்டல்..! இடைநிலை ஆசிரியர்கள் புகார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share