×
 

ஒருமையில் விளாசிய மாவட்ட செயலாளர்... மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை... மனைவி கண்ணீர் புகார்...!

தவெக மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலன் ஒருமையில் பேசியதின் காரணமாகவே தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக பரந்தாமனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். 

ராமேஸ்வரத்தில் தவெக நிர்வாகி தற்கொலை, தவெக மாவட்ட செயலாளர் ஒருமையில் பேசியதால் தற்கொலை செய்து கொண்டதாக இறந்தவரின் மனைவி குற்றச்சாட்டு; போலீசார் விசாரணை 

ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியில் சேர்ந்த முன்னாள் ராணுவவீரரும் தவெக வார்டு  செயலாளருமாக பரந்தாமன் என்பவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வார்டு செயலாளராக இருந்த பரந்தாமனை தவெக மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபால் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி வேற ஒரு நபரை வார்டு செயலாளராக நியமித்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரருமான பரந்தாமன் வார்டு செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியதை அடுத்து மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலனை நேரில் சென்று பேசிய போது கட்சி நிர்வாகி மத்தியில் மாவட்ட செயலாளர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது

இதையும் படிங்க: கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

இதனை அடுத்து மன உளைச்சல் அடைந்த பரந்தாமன் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட பரந்தாமனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தவெக மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலன் ஒருமையில் பேசியதின் காரணமாகவே தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக பரந்தாமனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது கணவரின் இறப்பிற்கு காரணமான மாவட்ட செயலாளர் மீது போலீசார் மற்றும் கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த பரந்தாமனின் மனைவி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 2 தொகுதியில் இடைத்தேர்தல்! 11 அமைச்சர்களை களமிறக்கிய முதல்வர் விஜய்! தவெக தேர்தல் வியூகம் குறித்து பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share