×
 

மரக்காணத்தில் பரபரப்பு... இரும்புக் கம்பியால் திமுக நிர்வாகி மண்டையை பொளந்த தவெகவினர்... காரணம் என்ன?

மரக்காணம் அருகே தேர்தல் முன்விரோதம் திமுக பிரமுகர் மீது   த வெ க வினர் தாக்குதல் போலீசார் விசாரணை.   

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி,  நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டி  ஏற்பட்டது. கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கள்ள ஓட்டு போடுவதாக பல்வேறு பகுதிகளில் திமுகவினருக்கும், தவெக, பாஜக, நாதகவினர் இடையே கடும் மோதல்கள் வெடித்தன. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் ஏஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் நேர்ந்தது. 

இதனிடையே, மரக்காணத்தில் தேர்தல் முன் விரோதம் காரணமாக திமுக நிர்வாகியை தமிழக வெற்றிக் கழகத்தினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் மீனவர் கிராமம் எல்லையம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் பாலகிருஷ்ணன்(71). இவர் திமுகவில் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவர் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னி அரசுக்கு பானை  சின்னத்துக்கு வாக்கு சேகரித்து உள்ளார். அப்போது இவருக்கும் அருகில் இருந்த தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்கு சேகரிப்பது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பாலகிருஷ்ணன் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது நேற்று நள்ளிரவு நேரத்தில் கூனிமேடு மீனவர் பகுதி சேர்ந்த த வெக  நிர்வாகிகள் பவநேஷ்(25), அஜித்  ஆகியோர் பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களை பார்த்த பாலகிருஷ்ணன் எழுந்து பார்த்து உள்ளார்.

அப்போது பவனேஷ் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனின் காதில் குத்தியுள்ளார். மேலும் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து பாலகிருஷ்ணனின் தலையில் தாக்கி உள்ளார்.  பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்துள்ளார். இதனைப் பார்த்த பாலகிருஷ்ணனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக கனக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் முன்விரோதம் காரணத்தில் திமுக பிரமுகரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதையும் படிங்க: தவெகவால் திமுகவுக்கு அடித்த ஜாக்பாட்... இபிஎஸ் கோட்டைகளில் ஓட்டையைப் போட்ட விஜய்... வெளியானது பரபரப்பு கருத்துக்கணிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share