கணவர் கண் முன்னே பெண் நிர்வாகிக்கு தாறுமாறு அடி... வீடு புகுந்து தவெக நிர்வாகி அட்ராசிட்டி...!
விளாத்திகுளத்தில் பெண் நிர்வாகியை வீட்டிற்கு சென்று தாக்கியதாக தவெக நகரச் செயலாளர் மீது வழக்குப்பதிவு - தலைமறைவான நகர செயலாளர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த ராஜபாண்டியன் இவரது மனைவி தனலட்சுமி (37). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடக்க காலம் முதல் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2-ந்தேதி இரவு, விளாத்திகுளம் நகரச் செயலாளர் முத்துராமலிங்க சேதுபதி, தனலட்சுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, நகரச் செயலாளராக தான் இருக்கும் போது தன்னை மதிக்காமல் மாவட்டச் செயலாளரை சந்திக்கச் சென்றது ஏன் என்றும் கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தன்னிடம் தெரிவித்துவிட்டே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, முத்துராமலிங்க சேதுபதி தனது மனைவி சௌந்தர்யாவுடன் தனலட்சுமியின் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டிலிருந்த தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை ஆபாசமாகப் பேசி, செருப்பால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், முத்துராமலிங்க சேதுபதியின் மனைவி சௌந்தர்யாவும் தனலட்சுமியை கீழே தள்ளி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நான் சினிமா நட்சத்திரமோ, வாரிசோ அல்ல; உங்களில் ஒருவன்! தவெகவை சாடிய எடப்பாடி பழனிசாமி!
இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமியின் கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தலையிட்டு அவர்களை விலக்கிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து தனலட்சுமி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இந்தப் புகாரின் பேரில், முத்துராமலிங்க சேதுபதி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முத்துராமலிங்க சேதுபதி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. விளாத்திகுளத்தில் தவெக பெண் நிர்வாகி மீது அதே கட்சியை சேர்ந்த நகர செயலாளர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் தொடர்பாக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவமும் புகாரை தொடர்ந்து நகர செயலாளர் தலைமறைவான சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!