“அது கிராபிக்ஸ்...” - சட்டமன்றத்தில் ஏஐ கண்ணாடி பயன்படுத்தியதாக சர்ச்சை... அமைச்சர் கொடுத்த விளக்கம்...!
ஆனால் அந்த கண்ணாடியை ஏஐயில் கிராபிக் செய்து கேமரா பொருந்திய கண்ணாடியை நான் சட்டமன்றத்தில் அணிந்ததாக பரப்பி உள்ளனர்.
சட்டமன்றத்தில் ஏஐ கேமரா கண்ணாடியை நான் பயன்படுத்தவில்லை,
நான்கு ஐந்து தினங்களுக்கு முன்பு பிரபல கண் மருத்துவமனையில் நான் கண் பரிசோதனை மேற்கொண்டேன். சிறுவயதில் இருந்து கண் பிரச்சனை இருப்பதால் தலைவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது மருத்துவர்கள் பரிந்துரைத்த கண்ணாடியை தான் நான் அணிந்துள்ளேன். ஆனால் அந்த கண்ணாடியை ஏஐயில் கிராபிக் செய்து கேமரா பொருந்திய கண்ணாடியை நான் சட்டமன்றத்தில் அணிந்ததாக பரப்பி உள்ளனர்.
நேரலையில் சட்டமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் பொழுது நான் ஏஐ கேமரா கண்ணாடி அணிய வேண்டும். இந்த குற்றச்சாட்டு நகைச்சுவையாக உள்ளது. எதையாவது என்னை சொல்ல வேண்டும் தன்னை டச் செய்ய வேண்டும் என்பதற்காக குற்றச்சாட்டை சொல்கின்றனர். இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போதும் சட்டமன்றத்தில் அணிதிருந்த கண்ணாடியை தான் அணிந்திருக்கிறேன் வேண்டுமென்றால் ஜூம் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தை கிளப்பி விட்டவர்கள் தான் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.... புதுக்கோட்டையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பேட்டி.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கையின் போது 15 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்களும் ஆண்டுகளும் போகப் போக அரசாணை மூலமாக என்னென்ன திட்டங்கள் தேவையோ அந்த திட்டங்கள் தேவைக்கேற்ப செய்து கொடுக்கப்படும். இன்னும் சிறப்பான திட்டம் எந்தெந்த மாவட்டத்திற்கு என்னென்ன தேவையோ அடுத்தடுத்து நிறைவேற்றப்படும். இஎஸ்ஐயில் புதிதாக பலத்த திட்டங்கள் கொண்டு வருகின்றோம். அது அறிவிப்பில் வரவில்லை என்றாலும் தனியாக வரும். தொழிலாளர் நலனில் அவர்கள் தங்குமிடம் ஓய்வெடுக்கும் இடமும் அதேபோல் திறன் மேம்பாட்டில் பெரிய தொகையில் புதிதாக வரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இதெல்லாம் அடுத்த அறிவிப்பில் தான் தெரியவரும் வார்த்தைகளில் சொல்வதைவிட செயலில் காண்பிப்போம். கடந்தாச்சி அதற்கு முந்தைய ஆட்சி போல் இல்லாமல் இந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரலையில் அனைவருமே தெரிந்து கொள்ளலாம். எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள் என்றால் அதற்குரிய என்ன சரியான பதிலோ மக்களுக்காக என்ன திட்டங்கள் செய்கின்றோமோ அதை சரியாக சொல்கிறோம். ஐடிஐ மாணவர் சேர்க்கை மேலும் நீட்டிக்க அந்த சூழ்நிலை பொருத்தும் மாணவர்களின் சேர்க்கை பொருத்தும் முடிவெடுக்கப்படும்.
இதையும் படிங்க: 15 நாட்களாக காத்திருப்பு... உறுதியளித்த அமைச்சர்கள்..!! தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்..!!
நாங்கள் ஆளுங்கட்சி நாங்கள் ஏன் பிரச்சனை செய்யப் போகிறோம். சட்டமன்றத்தில் பிரச்சனை யார் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
நான்கு ஐந்து தினங்களுக்கு முன்பு பிரபல கண் மருத்துவமனையில் நான் கண் பரிசோதனை மேற்கொண்டேன். சிறுவயதில் இருந்து கண் பிரச்சனை இருப்பதால் தலைவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது மருத்துவர்கள் பரிந்துரைத்த கண்ணாடியை தான் நான் அணிந்துள்ளேன். ஆனால் அந்த கண்ணாடியை ஏஐயில் கிராபிக் செய்து கேமரா பொருந்திய கண்ணாடியை நான் சட்டமன்றத்தில் அணிந்ததாக பரப்பி உள்ளனர். அதற்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது. நேரலையில் சட்டமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் பொழுது நான் ஏஐ கேமரா கண்ணாடி அணிய வேண்டும். இந்த குற்றச்சாட்டு நகைச்சுவையாக உள்ளது. எதையாவது என்னை சொல்ல வேண்டும் டச் செய்ய வேண்டும் என்பதற்காக குற்றச்சாட்டை சொல்கின்றனர். இதைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது தான் அணிந்திருக்கும் கண்ணாடியை தான் அணிந்திருக்கிறேன் வேண்டுமென்றால் ஜூம் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தை கிளப்பி விட்டவர்கள் தான் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
சட்டமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலளிப்பதாக கூறியுள்ளார் பதிலளித்த பிறகு அது பற்றி பேசிக் கொள்ளலாம் என்றார்.
இதையும் படிங்க: சாம்பாரில் சாணிப் பவுடர்..! குற்றவாளி ARREST..!! சம்பவம் குறித்து ஆட்சியர் விளக்கம்..!!