ரீல்ஸ் வெறியால் தவெக எம்.எல்.ஏ. செய்த காரியம்... குறைகளை கொட்டித் தீர்க்க வந்த மக்கள் ஆத்திரம்...!
குறைகளை கேட்க வந்தாரா? அல்லது சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிட வந்தாரா? - கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ கேமராமேன்கள் செயலால் அதிருப்தி அடைந்த மக்கள்
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இந்தக் கூட்டத்திற்கு பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரிஐங்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம மக்கள் தங்களது பகுதிகளில் முறையாக குடிநீர் வருவதில்லை, குப்பை கழிவுகள் அகற்றப்படுவதில்லை, சாக்கடை தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் தேங்கி நின்று நோய் தொற்று பரவி வருகிறது என பல்வேறு பிரச்சனைகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் முன்வைத்தனர்.
இந்த நிலையில் எம்எல்ஏ உடன் வந்திருந்த அவரது இரண்டு கேமரா மேன்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் எம்.எல்.ஏ கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட வீடியோவை பதிவிடுவதற்காக வீடியோக்களை எடுப்பதில் தீவிரம் காட்டினர்
இதையும் படிங்க: ஆளுநர் உரைக்காக வெயிட்டிங்... காரணங்களை அடுக்கி தவெகவை டரியல் ஆக்கிய கொங்கு ஈஸ்வரன்...!
சிறிய அளவிலான இடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அமர்வதற்கே சிரமப்பட்டு உள்ள நிலையில் எம்எல்ஏவின் கேமராமேன்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்து வீடியோக்கள் எடுத்ததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சிலர் பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியேறினர்
பொதுமக்களின் குறைகளைக் கேட்பதற்காக நடைபெறும் சிறப்பு கிராம கூட்டத்தில் கூட மக்களின் பிரச்சனைகளை கேட்பதில் தீவிரம் காட்டாமல் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிடுவதை மட்டும் ஆர்வம் காட்டுவதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
இதையும் படிங்க: 20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை? விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!