×
 

"என்னை வெட்டி கூட போடுங்கள்... அதுக்கு மட்டும் வராதீங்க...” - தொகுதி மக்களிடம் சவுண்ட் விட்ட தவெக எம்.எல்.ஏ...!

என்னை வெட்டி வேண்டுமானாலும் போடுங்கள் ஆனால் இந்த நிலம் பிரச்சனையில் என்னிடம் வராதீர்கள் என்று தமிழக வெற்றிக்கழக கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி செலுத்த சென்ற தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினரிடம் அரசால் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தில் விடப்பட்ட புறம்போக்கு நிலத்தில் பட்டா கேட்டு மனு அளித்த நிலையில்,  "நீங்கள் நீதிமன்றத்தில் சென்று பட்டா வாங்கிக் கொள்ளுங்கள். என்னை வெட்டி வேண்டுமானாலும் போடுங்கள், ஆனால் இந்த நிலம் பிரச்சனையில் என்னிடம் வராதீர்கள் என்று தமிழக வெற்றிக்கழக கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற சுப்ரமணியன் இன்று காவேரி நகர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி செலுத்தினார். அப்போது காவேரி நகர் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியனிடம் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிk கழகதினர் நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன்,  "நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்று பட்டா வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பிரச்சனையில் இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது. இந்த இடம் தனியார் மில்லுக்கு ஒப்பந்தத்தில் உள்ளது என ஆவணங்களில் பதிவாகியுள்ளதால் இதற்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது" என்று கூறியதும் அங்கிருந்த ஒருவர் நாங்கள் குடியிருக்கும் இடம் மில்லுக்கான ஒப்பந்தத்தில் இல்லை என்றும் இது குடியிருப்பு பகுதி என்றும் கூறி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 436 தொலைநோக்கு திட்டங்கள்..! அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

இதனால் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன சுப்பிரமணியன்   "இங்கேயே என்னை வெட்டிப் போட்டு விடுங்கள் என்று பேசியதால் பொதுமக்கள் மட்டும் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உங்களால் முடிந்த உதவிகளை இந்த விஷயத்திற்கு செய்து தாருங்கள் என்று கேட்க , "வேறு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் இந்த விஷயத்தில் என்னால் எதுவுமே செய்ய முடியாது" என்று கையை விரித்தார் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன்.
 

இதையும் படிங்க: வெற்றி தமிழகம் அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share