×
 

நெல்லையில் நயினார் நாகேந்திரன் தோற்பது உறுதி... தவெக நிர்மல் குமார் சபதம்...!

ராஜ கண்ணப்பன், கோ.தளபதி சும்மா பேசவில்லை திமுக தலைமை சொன்னதை பேசி இருக்கிறார்கள். மனசில் தோன்றியதைப் பேசவில்லை.

வேட்பாளர் தேர்வில் யாருடைய தலையிடும் இல்லாமல் எங்கள் தலைவர் தான் தனிப்பட்ட முறையில் முடிவெடுப்பார் என் த.வெ.க பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். 

தமிழக வெற்றி கழக இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:  கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது. 15000 கோடிக்கும் மேற்பட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக அதற்கான கால அவகாசம் அதிகம் எடுக்கும் ஆனால் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் டெண்டர் வெளியிடப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளனர். கமிஷன் வாங்குவதற்காக அவசரக் கதியுடன் ஓடுவதற்காக இதை செய்வது போல் தெரிகிறது. திமுக இத்துடன் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிகிறது அதனால் கிடைத்தவுடன் சுருட்டி ஓடலாம் என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதில் 2000 கோடிக்கு மேல் கமிஷன் வரும் என்று நினைக்கிறேன். 

நெடுஞ்சாலை துறைக்கு 2000 கோடி அளவிற்கு பட்ஜெட்டுக்கு முன்பாகவே ஒதுக்கி இருக்கிறார்கள். முறைகேடு செய்வதற்காகவே ஒதுக்கி இருப்பது போல் தெரிகிறது. சென்னை மாநகராட்சி 4000 கோடி டெண்டர் 10 நாட்களில் முடித்துள்ளனர். அனைத்து துறைகளிலும் 15 ஆயிரம் கோடிக்கு மேல் பத்து நாட்களுக்குள் கொடுத்திருக்கிறார்கள். இத்துடன் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை அடுத்த ஆட்சி எங்களுடைய ஆட்சி தான்.

இதையும் படிங்க: நயினார் திமுகவுக்கு விலை போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு... TVK நிர்மல்குமார் குற்றச்சாட்டு...!

எங்களுடைய ஆட்சியில் இப்போது விடப்பட்டுள்ள முறைகேடான டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இந்த கான்ட்ராக்டர்கள் டெண்டர் எடுப்பவர்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது முறையாக விதிப்படி வழிகாட்டுதலின்படி பின்பற்ற வேண்டும். அதிகாரிகள் விலை போகாமல் பொறுப்பாக இருக்க வேண்டும் இது மக்களின் வரிப்பணம் முறையாக டெண்டர் வெளியிடப்பட வேண்டும். இது முக்கியமாக மாற்றுவது அதிகாரிகள் தான் திமுகவுக்கு உடந்தையாக இல்லாமல் மக்களுக்கு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உதயநிதி அந்த குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் திமுகவில் கவுன்சிலர் ஒன்றிய செயலாளர் கூட ஆகியிருக்க முடியாது.  அவர் அப்பாவே ஒரு பொம்மை முதல்வர். உதயநிதி அப்பா செல்ல முடியாத இடத்திற்கு சென்று வேலைகளை செய்து வருகிறார். அவரது துறை செயலாளரிடம் ஒரு ஆலோசனை கூட்டம் அது நடத்திருப்பாரா. அவர் கடைசி வரை கத்துக்குட்டியாக தான் இருக்கிறார் எதையும் கற்றுக்கொள்ள போவதில்லை. நாயுடன் விளையாடும் புகைப்படத்தை ஒரு துணை முதல்வர் வெளியிடுவாரா. யாரோ ஆரம்பித்த கட்சி இன்று அறிவாலயத்தில் அமர்ந்து இருக்கிறார் அவருக்கு அரசியல் தெரியாது கற்றுக்கொள்ள போவதுமில்லை. 

அண்ணாவை மறந்தது திமுக, அதிமுக. எம்ஜிஆர் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றியவர் கருணாநிதி. அந்த குடும்பத்திற்கு கட்சி அரசியல் எல்லாம் ஒரு வியாபாரம். எங்கள் தலைவர் மக்கள் பணி செய்ய வந்திருக்கிறார். 4998 பேருதான் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தீர்களோ மருத்துவர் முதல் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருந்தது. மக்கள் பாதுகாப்புக்கு நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம். 

வேட்பாளர் தேர்வு முழுமையாக எங்கள் தலைவர் தான் தேர்வு செய்வார்.  விருப்பமனுக்கள் வந்து கொண்டிருக்கிறது. யாருடைய தலையிடும் இல்லாமல் எங்கள் தலைவர் தான் தனிப்பட்ட முறையில் முடிவெடுப்பார்.

நேற்று அண்ணன் மாணிக்கம் தாகூர் பேசியதை பார்ப்பேன் அவர் கேட்டது நியாயமான கோரிக்கை அவர் காண்ட்ராக்டோ, கமிஷனா கேட்கவில்லை மரியாதை கேட்கிறார்கள். 2001 காலகட்டத்தில் பாஜகவை காப்பாற்றியது திமுக தான். அத்துடன் திமுகவிற்கு அரசியல் வாழ்வு முடிந்திருக்கும் அதை காப்பாற்றியது காங்கிரஸ்தான்.

2006 இல் மைனாரிட்டி அரசாக இருந்தது. அரசாங்கதில் பங்கு கொடுப்பதாக சொல்லி ஆட்சி அமைத்தார் கலைஞர் ஆனால் அதை சோனியா காந்தி மன்னித்து விட்டு விட்டார். எங்களை நம்ப வைத்து கருணாநிதி ஏமாற்றி விட்டார். மைனாரிட்டி அரசுக்கு நாங்க தான் இருக்கிறோம் என்று அன்று பேசினார்கள். காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அந்த கட்சியை வைத்திருக்கிறார்கள் திமுகவிற்கு காங்கிரஸ்தான் அரசியல் வாழ்க்கை கொடுத்தவர்கள். 

போன உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் தொகுதி பங்கீடு காங்கிரசுக்கு சேர்மன் விசாரணை கொடுத்த இடத்தில் போட்டி வேட்பாளராக திமுகவை நிறுத்தி காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்கள். அனைத்து இடத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்களை திமுகவே எதிர் வேட்பாளரை நிறுத்தி தோற்கடித்தார்கள். திமுக தலைவர்கள் ஒன்று சேர்ந்து 

ராஜ கண்ணப்பன், கோ.தளபதி சும்மா பேசவில்லை திமுக தலைமை சொன்னதை பேசி இருக்கிறார்கள். மனசில் தோன்றியதைப் பேசவில்லை. பாமகவை எப்படி ஒழித்துக் கட்டினார்களோ அதே போல காங்கிரசை தோக்கடிப்பார்கள். கூட வைத்து துரோகம் செய்வது திமுக வல்லவர்கள். மொத்த அமைச்சர்களும், தலைவர்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெயிக்க வைக்க கூடாது என்று முடிவெடுப்பதாக தகவல் வந்துள்ளது காலம் தான் பதில் சொல்லும். யாரையும் அனுமதிக்க கூடாது என்று எங்கள் நிர்வாகிகளிடம் சொல்லி இருந்தோம் ஆனால் ஒரு சில நிர்வாகிகள் அனுமதித்திருக்கிறார்கள். இனி வரும் போது கடுமையான பாதுகாப்பை பார்ப்போம். 

நிறைவேற்றாத வாக்குறுதிகளில் எப்போது வேண்டுமானாலும். வந்தவுடன் விரைவில் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை தான் நாங்கள் கொடுப்போம். நயினார் என்ன சிந்திக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அவரது கூட்டணி கட்சிகளை இணக்கமாக வைத்து தேர்தலை சந்திக்கிறாரா அவரது கட்சிக்குள்ளேயே போராடுகிறாரா என்று தெரியவில்லை.  கூட்டணி கெட்டாலும், அவரது கட்சி கெட்டாலும் திமுகவுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று இருக்கிறார். திமுகவின் முதல் அடிமையாக தான் நயினார் இருக்கிறார் என நிர்மல்குமார் கூறினார்.

இதையும் படிங்க: "விசில்"..! இது அனைத்து மக்களுக்குமான சின்னம்..! TVK நிர்மல் குமார் நெகிழ்ச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share