×
 

தவெகவை மீறிச் செயல்பட்டால்... நிர்வாகிகளுக்கு விஜய் வைத்த செக்..!

நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி. கொள்கைகள். கோட்பாடுகள். குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்

''தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமனம்'' செய்து தவெக தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிவிப்பில், ''தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமனம் 
கழக விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே. தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, பின்வரும் தோழர்களை, கழகத் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்கிறேன். 

உறுப்பினர் 1. திரு. என். ஆனந்த், கழகப் பொதுச் செயலாளர், உறுப்பினர் 2. திருமதி சி.விஜயலட்சுமி, மாநிலச் செயலாளர், உறுப்பினர் சேர்க்கை அணி. 

இதையும் படிங்க: தலைவர பாத்தே ஆகணும்..! பவுன்சர்களுடன் மல்லுக்கட்டும் தவெக தொண்டர்கள்..!


இக்குழுவானது, கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி. கொள்கைகள். கோட்பாடுகள். குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்குழுவிற்குக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் கழக நிர்வாக வசதிக்காகத் தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு. மேற்கு, தெற்கு மற்றும் மத்திய / கிழக்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த நான்கு மண்டலங்களில் உள்ள வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட கழக மாவட்டங்களுக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. 

இந்த மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் கீழ்க்கண்டவாறு ஒரு பெண் உட்பட நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 

1. வடக்கு மண்டலம் 
ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்: 
1. திரு.A.பார்த்திபன் -மாவட்டக் கழகச் செயலாளர், சேலம் மத்திய மாவட்டம் 
2. திரு.K.விக்னேஷ் - மாவட்டக் கழகச் செயலாளர், கோவை தெற்கு மாவட்டம் 
3. திரு.M.ரவிசங்கர் மாவட்டக் கழகச் செயலாளர், திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம் 
4. திருமதி B.தன்யா, கழக உறுப்பினர். ஈரோடு மாநகர் மாவட்டம் 


மேற்கண்ட குழுவிற்கான வருவாய் மாவட்டங்கள்: 
1. சென்னை 
2. திருவள்ளூர் 
3. காஞ்சிபுரம் 
4. செங்கல்பட்டு 
5. ராணிப்பேட்டை 
6. வேலூர் 
7. திருப்பத்தூர் 
8. திருவண்ணாமலை 
9. விழுப்புரம் 
10. கடலூர் 
11. கள்ளக்குறிச்சி 
ஆகிய மாவட்டங்கள். 

2.மேற்கு மண்டலம் 
ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்: 
1.திரு.R.சரவணன் - மாவட்டக் கழகச் செயலாளர், தஞ்சை மத்திய மாவட்டம் 
2.திரு.S.R.தங்கபாண்டி - மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் 
3.திரு. R.பரணி பாலாஜி - மாவட்டக் கழகச் செயலாளர், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் 
4. திருமதி A.சத்திய பாமா கழக உறுப்பினர், திருநெல்வேலி தெற்கு மாவட்டம் 

மேற்கண்ட குழுவிற்கான வருவாய் மாவட்டங்கள்: 
1. திண்டுக்கல் 
2. கரூர் 
3. நாமக்கல் 
4. திருப்பூர் 
5. ஈரோடு 
6. கோயம்புத்தூர் 
7. நீலகிரி 
8. சேலம் 
9. தர்மபுரி 
10. கிருஷ்ணகிரி 
ஆகிய மாவட்டங்கள். 
3.தெற்கு மண்டலம் 

ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்: 
1. திரு.V.சம்பத்குமார் - மாவட்டக் கழகச் செயலாளர், கோவை மாநகர் மாவட்டம் 
2. திரு.M.சுகுமார் -மாவட்டக் கழகச் செயலாளர், நாகப்பட்டினம் 
3. திரு.J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர், புதுக்கோட்டை மத்திய மாவட்டம் 
4. திருமதி M.ராணி - கழக உறுப்பினர். கரூர் மேற்கு மாவட்டம் 

மேற்கண்ட குழுவிற்கான வருவாய் மாவட்டங்கள்: 
1. மதுரை 
2. தேனி 
3. சிவகங்கை 
4. ராமநாதபுரம் 
5. விருதுநகர் 
6. தென்காசி 
7. திருநெல்வேலி 
8. தூத்துக்குடி 
9. கன்னியாகுமரி 
ஆகிய மாவட்டங்கள். 
4.மத்திய/கிழக்கு மண்டலம் 

ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்: 
1. திரு.K.அப்புனு (எ) வேல்முருகன் - மாவட்டக் கழகச் செயலாளர், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம் 
2. திரு.A.அன்பன் கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் 
3. திரு.B.ராஜ்குமார் - மாவட்டக் கழகச் செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்டம் 
4. திருமதி S. பத்மாவதி - கழக உறுப்பினர். தர்மபுரி மேற்கு மாவட்டம் 

மேற்கண்ட குழுவிற்கான வருவாய் மாவட்டங்கள்: 
1. திருச்சி 
2. பெரம்பலூர் 
3. அரியலூர் 
4. தஞ்சாவூர் 
5. புதுக்கோட்டை 
6. திருவாரூர் 
7. மயிலாடுதுறை 
8. நாகப்பட்டினம் 


ஆகிய மாவட்டங்கள்.

 

இந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் தங்களுக்குரிய மண்டலங்களில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள் மீது கழக விதிகளின்படி உரிய நடவடிக்கைகளை, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் பேரில் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்குழுக்களுக்குக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வா தலைவா வா! உற்சாகம்.. ஆரவாரம்.. விஜயை வரவேற்க காலை முதலே குவிந்த தொண்டர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share