×
 

7 இல்ல! மொத்தம் 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும்? CM விஜய் Mission! தவெக சீக்ரெட் டார்கெட்!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் வகையில், 12 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த, ஆளுங்கட்சி தலைமை திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சியை முழு பெரும்பான்மையுடன் வலுப்படுத்த 12 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் வியூகத்தை ஆளுங்கட்சி தலைமை தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்த த.வெ.க., திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதல்வர் ராஜினாமா செய்ததால் சட்டசபையில் அதன் பலம் 106 ஆகக் குறைந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். 

மேலும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மற்றும் கரூர் விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஏழு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: நலத்திட்ட உதவியில் ரேஷன் அரிசி..! வெட்கக்கேடு..! விளாசிய நயினார்..!!

இந்நிலையில், வட மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து மொத்தம் 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த த.வெ.க. தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி, தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள நான்கு எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ரகசியப் பேச்சுகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் 16 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் நிலை உருவாகும்.

இடைத்தேர்தல்களில் த.வெ.க. முழுமையான வெற்றி பெற்று, கூட்டணி ஆதரவு இன்றியே ஐந்து ஆண்டுகள் ஆட்சியை தொடரும் என முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் த.வெ.க.வுக்கு சட்டசபையில் வலுவான பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியல் களம் இப்போது இடைத்தேர்தல் பரபரப்பில் முழ்கியுள்ளது. அதிமுக மற்றும் தி.மு.க.வில் இருந்து வரும் ராஜினாமா அலைகள் த.வெ.க.வின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாக ஆளுங்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகளோ இதை அதிகாரத்தை தக்க வைக்கும் வியூகம் என விமர்சித்து வருகின்றன.

தமிழக சட்டசபையில் அடுத்தக்கட்ட அரசியல் மாற்றங்கள் என்னவாக இருக்கும் என்பதை அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இதையும் படிங்க: நேர்ல போய் பாக்கமாட்டாரா..? CM விஜயை துரத்திய கேள்விகள்... ஒருவழியாக கரூர் செல்ல திட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share