×
 
☰

“நான் எந்த பெட்டியும் வாங்கவில்லை...” - விரட்டி விரட்டி துரத்தும் தாராபுரம் மக்களிடம் கதறிய தவெக வேட்பாளர் சத்யபாமா...!

நான் எந்த பெட்டியும் வாங்கவில்லை - அதிமுக தலைமை பிடிக்காமல் கட்சி மாறினேன்- பொதுமக்களிடத்தில் சத்தியபாமா எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பு.

தாராபுரம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக அமைச்சர் விஜய் பாலாஜி பிரச்சாரம்- செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லை என புகார் - நான் எந்த பெட்டியும் வாங்கவில்லை - அதிமுக தலைமை பிடிக்காமல் கட்சி மாறினேன்- பொதுமக்களிடத்தில் சத்தியபாமா எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பு.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி அலங்கியம் மற்றும் தளவாய்பட்டினம் ஊராட்சிப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்திற்காக சென்ற பகுதிகளில், கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே பொதுமக்களை அழைத்து வந்து வேட்பாளர் மற்றும் அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளர் சத்தியபாமா மற்றும் அமைச்சர் விஜய் பாலாஜி வாக்கு சேகரித்தனர்.

இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிராக NGT-யில் வழக்கு... திட்டம் நிறுத்தப்படுமா? விசாரணை..!!

அப்போது, அப்பகுதி பெண்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என புகார் தெரிவித்தனர். இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி, இடைத்தேர்தல் முடிந்ததும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் சத்தியபாமா, தாம் பணம் பெற்றுக்கொண்டு கட்சி மாறியதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கூறினார்.

மேலும், தனது உடல்நிலை குறித்து அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறிய அவர், தான் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும், அதனால்தான் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சத்தியபாமா, அதிமுக மீது தனக்கு எந்தவித வெறுப்பும் இல்லை என்றும், தற்போதைய அதிமுக தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அக்கட்சியிலிருந்து விலகி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகவும் கூறினார்.

தன்னைப் பற்றி பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், மீண்டும் மக்கள் பணியாற்ற தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, சத்தியபாமா பிரச்சாரத்திற்கு சென்ற சில இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே திரண்டன. இதனால் பிரச்சாரத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது
 

இதையும் படிங்க: சமூக வலைதள பிரசாரத்திற்கு ரூ.0! வெளியானது தவெக தேர்தல் கணக்கு! திமுகவுடன் ஒப்பிட்டால் ஷாக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share