“அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!
மனிதன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்ற தத்துவத்தை சொல்லிக் கொடுத்தவர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அனைத்து கட்சி சார்பில், ஐயா நல்லகண்ணு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
இரங்கல் நிகழ்ச்சியில் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், ஒரு நல்ல மனிதர் தமிழகத்தில் தோன்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். வாழ்நாள் முழுவதும் தனக்காக அல்லாமல் மக்களுக்காக வாழ்ந்தார். இயக்கத்தின் கொள்கைகளை பட்டி தொட்டி என்றும் பரப்பினர். நூறு வயதை கடந்த பிறகும் உடல்நலம் குன்றிய நிலையில் அரசு மருத்துவமனைக்கு தான் செல்வேன் என சிகிச்சை பெற்றார். அரசியல் வரலாற்றில் ஒரு தூய்மையானவர்.
விஜய் அவருக்கு இறுதி அஞ்சலியை சென்னையில் செலுத்தினார். அரசியல் வரலாற்றில் தூய்மையான மனிதநேயம் மிக்க சோசியலிச சித்தாந்தத்தை தமிழகத்தில் பரப்பியவர், வாழ்க்கையை சேவைக்காக அர்ப்பணித்தவர் அப்படிப்பட்ட தூய்மையான மனிதனை காண்பது இன்று எளிதல்ல. நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றாலும் அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்..
இதையும் படிங்க: CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!
அவர் இருந்தாலும் மறைந்தாலும் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் அவர் வழிகாட்டியாக இருந்தவர். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். மனிதன் வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்ற தத்துவத்தை சொல்லிக் கொடுத்தவர். உழைப்பால் உயர்ந்தவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், சமநிலை உருவாக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அயராது உழைத்தவர்.. அவரது புகழ் என்றும் ஓங்கும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: நவீன உலகின் கொடை வள்ளல்! ஏழ்மையின் வடிவம்! தனக்கு கிடைத்த நிதி எல்லாம் திருப்பி அளித்தவர் நல்லக்கண்ணு!