எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது... தவெக பரப்புரையில் படு ஓபனாக பேசிய செங்கோட்டையன்...!
45 ஆண்டுகால உழைப்பை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்தனர் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் உருக்கமான பேச்சு
கோபி அருகே சொந்த ஊரான குள்ளம்பாளையம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், சேலத்து மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, ஊராட்சி மன்ற தலைவர் இருந்து இன்று வரை உங்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறேன். நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை நான் இன்றைக்கு கோட்டைக்கு செல்ல வேண்டும் என்றால் உங்கள் கரங்கள் என்னை ஆதரிக்க வேண்டும். நான் கோட்டைக்கு செல்லும் வாய்ப்பும், அமைச்சராகும் வாய்ப்பும் உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று களம் காண்கிறோம். இந்த இயக்கத்திற்காக 45 ஆண்டுகாலம் பாடுபட்டவன் நான். ஆனால், துளியும் யோசிக்காமல் என்னை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்தார்கள். அரசியல் வரலாற்றில் யாரை அடையாளம் காட்டினேனோ அவர்தான் என்னை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்து இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல இந்த இயக்கத்திற்கு நான் உழைத்த உழைப்பு என்பது எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசியோடு அரும்பணியாற்றி இருக்கிறேன். விஜய் உடன் இணைந்த பிறகு ஒரே மணித்துளியில் யார் என்று கூட பார்க்காமல் இன்று என்னை உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கிறார். நம்முடைய மக்களாக இருக்கிற நீங்கள் தீர்ப்பை வழங்க வேண்டிய நேரம் தான் இது.
இதையும் படிங்க: “ஜோசப் விஜய் ஒரு நீர்க்குமிழி; புறக்கணிக்க வேண்டிய சக்தி...” - வெளுத்து வாங்கிய சிபிஐ சண்முகம்...!
தொடர்ந்து பத்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்க போது இரட்டை இலைக்கு வாக்களித்த மக்களுக்கும், இக்கட்டான சூழலில் என்னை கைவிடாமல் தாங்கிப் பிடித்தவர்களுக்கு என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உண்மையாக உழைப்பேன். தவெக தலைவர் நாளை கோட்டைக்கு செல்வார்.அப்போது தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகும்.
எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது. அதை நிகழ்த்துகிற சக்தி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உள்ளது. மற்றவருக்கு இல்லை என்பதை என்டிஏ கூட்டணியில் இருக்கிற அத்தனை பேரும் அறிவார்கள். வரும் தேர்தலில் மக்கள் வழங்கும் இந்த தீர்ப்பை பொறுத்தவரையில் தமிழக மக்கள் விரும்புகிற தீர்ப்பாக அதுவும் தவெக தலைவர் நாளை கோட்டை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு அத்தனை பேரும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நல்ல ஆட்சி தமிழகத்தில் உருவாவதற்கு, ஏழையின் கண்ணீரை துடைப்பதற்கு, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாணவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னார். நல்லவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்." ஜனநாயகன் படம் மட்டும் வெளியாகியிருந்தால் 1000 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். தவெக தலைவர் விஜய் சிபிஐ வழக்கு தொடர்பாக மூன்று முறை நேரில் சென்று வந்துள்ளார். இத்தனை சோதனைகளையும் கடந்தே உங்கள் முன் நிற்கிறார்" ஆயிரம் கோடி வருவாயை விட்டுவிட்டு எம்ஜிஆர் ஜெயலலிதா பிறகு மக்கள் பணியாற்ற வந்திருப்பது விஜய் மட்டுமே.
தூக்கி எறிந்ததுக்கு பிறகு என்னை தட்டி கொடுத்து இவ்ளவு மரியாதை கொடுக்கிறார் என்றால் நாளை தமிழகத்தை ஆளப்போகிறவர் அவர்தான். அவரை ஆட்சி கட்டிலில் அமரும் வரை உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தை சென்று தான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை ஆள ஒரு நல்ல தலைமை தேவை. ஜெயலலிதாவுக்கு பிறகு எம்ஜிஆர்க்கு பிறகு அந்த தலைமை உண்மையிலேயே இந்த மக்களுக்காக பணியாற்ற இருக்கிற தலைமையாக இந்த இயக்கம் இருக்கிறது. இன்று உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் பல ஆண்டுகள் பல முறை எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்கிறீர்கள் என்னை வாழ வைத்தவர் நீங்கள்.
நல்லவர் வல்லவர் ஆட்சிக்கு வர வேண்டும் உண்மையாக உழைக்கக்கூடியவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் நோக்கம் ஆனால் திமுக இன்று ததளித்துக்கொண்டு கொண்டிருக்கிறது.விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது பெண்கள் பாதுகாப்பு இல்லாத நிலை உருக்கப்பட்டிருக்கிறது.பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை உள்ளது இதை தகர்த்தெறிய வேண்டும். என்று சொன்னால் அனைவருக்கும் வேலை வேண்டும் அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி வேண்டும்.இதுதான் நமது லட்சிய பயணமாக இருக்கிறது.
முதியவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள், அவர்களின் நினைவில் இருப்பது முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா தான். இம்முறை நமது சின்னம் விசில் சின்னம், உங்கள் வாக்குகளை வரும் 23ம் தேதி விசில் சின்னத்திற்கு வழங்க வேண்டும். அதுவே நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் என்றார்
இதையும் படிங்க: பாலியல் புகாருக்கு ஆளான தவெக வேட்பாளர்... நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவு..!