உங்க இடம் என்னான்னு தெரிஞ்சி செயல்படுங்க... கண்கள் சிவந்த விஜய்... தவெகவினருக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!
கட்சியினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பை வெளியிட்டுருக்கிறார்.
அரசு விவகாரங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் தலையிடக்கூடாது என அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக இல்லாதவர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. கட்சியினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பை வெளியிட்டுருக்கிறார்.
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முதலமைச்சர் விஜய் அரசு மருத்துவமனைகள், அம்மா உணவகம், டாஸ்மாக் என துறை ரீதியான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். இதனையடுத்து எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், அதாவது அரசு பிரதிநிதிகள் இல்லாத சிலரும் ஆய்வு மேற்கொள்வதாக சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையானது வெடித்துள்ளது. அதனை கண்டித்து நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்து சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.
அதாவது தமிழக அரசு சார்ந்த விஷயங்களில் பொறுப்பில் இல்லாத நிர்வாகிகள் தலையிடக்கூடாது என அறிவுறுத்தல்களை வெளியிட்டுருக்கிறார். நம்முடைய கட்சியில்தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய தலைமையில மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைந்ததை மக்கள் மனங்குளிர்ந்து வரவேற்று மகிழ்கின்றனர். இந்த சூழலில் நமக்கான பொறுப்புணர்வு பல மடங்கு அதிகரித்திருக்கிறது எனவும், நமது கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கமே மக்கள் சேவையை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே கட்சி தோழர்கள் மக்கள் சேவையில் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை அதை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். அதே நேரத்தில கட்சி நிர்வாகிகள் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க: அடுத்த சர்ச்சைக்கு அடிபோட்ட விஜய்... ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டிக்கு முக்கிய அரசு பதவியை தூக்கிக் கொடுத்த முதல்வர்?
நம் கட்சிக்கும் முதலமைச்சருக்கும் தமிழக வெற்றிக்கழக தலைவர் அவருடைய நற்பெயருக்கும் எந்த விதத்திலும் கலங்கம் ஏற்படாத வகையிலும் நடந்து கொள்வது நம் தலையாய கடமையாகும். எனவே கட்சி நிர்வாகிகள் மக்கள் நல பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மாறாக மக்கள் பிரதிநிதிகள் அல்லாத கட்சி நிர்வாகிகள் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், ஆய்வுகள் மேற்கொள்வதும் அறவே கூடாது என்பதை கட்சி தலைவர் அவருடைய ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “இவர் இங்க என்ன பண்றாரு...” - தோற்று போன தொகுதியில் தவெக மாவட்ட செயலாளர் செய்த காரியம்... வைரல் வீடியோ...!