×
 

விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!

விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து நாளை திருமாவளவன் முடிவு செய்ய உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-இல் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற அது மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு கோரி த.வெ.க தலைவர் விஜய் கடிதம் எழுதிய சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி, த.வெ.க 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், அது சுமார் 10 இடங்கள் பின்தங்கியுள்ளது. இந்தப் பின்னணியில், ஆளுநருக்கு கடிதம் எழுதி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த விஜய், அதே நேரத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் வி.சி.க உள்ளிட்ட திமுக கூட்டணியின் முக்கிய கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளார்.

வி.சி.க-வுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அதிகாரப்பூர்வமானது என்பதை கட்சியின் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வி.சி.க எம்.பி. ரவிக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் கடிதம் தங்களுக்கு வந்ததைப் பொதுவில் குறிப்பிட்டு, அதுகுறித்து தங்கள் தலைவர் திருமாவளவன் உரிய விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்தார். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: LAST- ஆ ஒருமுறை..! இபிஎஸ் இல்லத்தில் சி.வி சண்முகம், வேலுமணி..! விஜய்க்கு ஆதரவு கொடுக்க நிர்ப்பந்தம்..!!

ஆட்சி அமைக்க விஜய் ஆதரவு கேட்டுள்ள நிலையில் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அவசர உயர்நிலை குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை உயர்நிலைக் குழு அவசர கூட்டம் நடைபெற உள்ளது. விஜய்க்கு ஆதரவு அளிக்குமாறு விசிக நிர்வாகிகள் திருமாவளவனிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் உயர்நிலைக் குழு கூடுகிறது.

இதையும் படிங்க: தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share