புஸ்ஸி ஆனந்துக்கு செக்! நிர்வாக குழுவில் கை வைத்த விஜய்..! அந்த 3 பேர் யாரு தெரியுமா?
புஸ்ஸி ஆனந்தின் எதிர்ப்பாளர்களுக்கு நிர்வாகக் குழுவில் விஜய் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் நடத்திய போது கூட்டு நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசியலில் புதிய அலை எனக் கூறப்பட்ட விஜயின் சுற்றுப்பயணத்தை இந்த சம்பவம் முடக்கிப் போட்டது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை கரூர் சம்பவம் முடக்கியிருந்த நிலையில், 28 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார். கட்சியின் அன்றாட பணிகளை இந்தக் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று கூடியது. விஜய் நியமித்த 28 பேர் கொண்ட குழுவில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் எதிர்பாளர்களுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு ஆனந்துக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தினரே சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். கட்சியை வழிநடத்த வேண்டியவரே தலைமறைவானதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனிடையே கரூர் நெரிசலுக்கு பிறகு ஆனந்தின் முக்கியத்துவம் குறைந்ததாக தெரிகிறது. முதல் முறையாக ஆனந்த் எதிர்பாளர்களுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 28 பேர் கொண்ட நிர்வாக குழுவில் இடம் பெற்றுள்ள மாவட்ட செயலாளர்கள் மூன்று பேர் ஆனந்தின் எதிர்ப்பாளர்கள் என்றும் அவருக்கு முன்பு இருந்தே விஜயின் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிஸ் ஆகக் கூடாது... விஜயின் கரூர் பயண ஏற்பாடுகள் செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைப்பு...!
அந்த 3 பேரும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி.யின் ஆதரவாளர்கள் என்றும் புஸ்ஸி ஆனந்தின் அதிகாரத்தை குறைக்க விஜய் முடிவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனந்த் எதிர்ப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் ஆனந்த் ஆதரவு நிர்வாகிகளையும் கண்காணிக்க செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: 7 நாட்களாக தண்ணி காட்டும் புஸ்ஸி ஆனந்த்... திணறும் தனிப்படை...!