"எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!
திமுக பெண்களின் பாதுகாப்பிற்கு எமன் ஆகிறது என்று தமிழக வெற்றிக்கழகம் கடுமையாக சாடி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமையை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி திமுக பிரமுகர் சிவா என்பவர் பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறவே மேல்மருவத்தூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திமுகவில் கிளை கழக பொறுப்பில் உள்ள சிவா தன் மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிவா மற்றும் சிறுமையை வீடியோ எடுத்த வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பெண்களின் பாதுகாப்பிற்கு திமுக எமனாகிறது என்றும் காமுகர்களின் கூடாரமாகிறதா அறிவாலயம் எனவும் தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சட்டத்தை எள்ளி நகையாடி, பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைத்து வரும் காட்டுமிராண்டித்தனமான குற்றங்கள் மிகுந்த அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே, 6-ஆம் வகுப்பு மாணவியிடம் திமுக கிளைக் கழகப் பொறுப்பாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அருவருக்கத்தக்கச் சம்பவம், "திமுகவினர் எதற்கும் துணிந்தவர்கள்" என்ற ஆணவத்தையே காட்டுகிறது என்றும் கூறியது.
கட்சி நிர்வாகிகள் வரிசையாகப் பாலியல் குற்றங்களில் சிக்கும்போது, அதன் தலைமை அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குப் பதிலாக, கள்ள மௌனம் காப்பதும், கண்துடைப்பிற்காகப் பெயரளவு நடவடிக்கை எடுப்பதும் வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை, விமானப் பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலரின் அநாகரிகம், கிருஷ்ணகிரியில் 2.5 வயதுப் பிஞ்சு குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம் இப்படிப் பெண்களுக்கு எதிரான அனைத்து அக்கிரமங்களிலும் திமுகவினரே முன்னணியில் இருப்பது, இக்கட்சி காமுகர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஒரு "பாதுகாப்பான புகலிடமாக" மாறிவிட்டதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது என்று தெரிவித்து உள்ளது. பெண் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு நரகச் சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ள திமுக தலைமைக்கு, வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!