"ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!
பொன்ராஜ் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு நேர்காணலில் தவெகவை ஆதரிக்கும் பெண் தொண்டர்கள் மற்றும் ரசிகைகளை விமர்சிக்கும் வகையில் பொன்ராஜ் பேசினார். “புருஷன் எனக்குத் தேவையில்லை. எனக்கு விஜய்தான் வேண்டும் என்று சொல்லும் விபச்சார கூட்டம். அண்ணாவாக இருந்தாலும், தங்கையாகவும் இருப்போம், அக்காவாகவும் இருப்போம், பெண்டாட்டியாகவும் இருப்போம் என்று விபச்சாரிகள் நிறைந்த, ரசிகைகள் நிறைந்த தற்குறி கூட்டம் இருக்கிறது” என்பது போன்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.
அவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்து இருப்பதாக கூறினார்.
தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து கொண்டதாக கூறியுள்ளார். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிந்தனையில் சாக்கடை... வார்த்தைகளில் வன்ம நாற்றம்... பொன்ராஜை விளாசிய அருண்ராஜ்..!!
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி என்றும் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். பொன்ராஜ் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: செம்ம அப்செட்... பதவியை பறித்த காங்கிரஸ்...! தவெகவில் இணையும் டி.செல்வம்..!!