×
 

ஜெயிச்சே தீரணும்... களமாடும் தவெக..! தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவு..!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கண்காணிப்பாளர்களை மாவட்ட வாரியாக விஜய் நியமித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் முதல் முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தல் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் முதன்மை சக்தியாக விளங்குகிறது. எனவே இந்த தேர்தலை கண்ணும் கருத்துமாக கையாள வேண்டும் என்பதில் தமிழக வெற்றி கழகம் முனைப்பு காட்டி வருகிறது.

விஜய்க்கு இருக்கும் ஆதரவை ஓட்டுகளாக மாற்றி அரசியலில் புதிய புயலை உருவாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. விஜய் அரசியலில் புதிய அலை என்றும் கூறப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்தக் கட்டத்தில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

கட்சியின் அமைப்பு வலுப்படுத்துதல், பிரசாரக் குழுக்கள் அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பல்வேறு முனைகளில் வேலை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை திறம்பட கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பாளர்களை விஜய் நியமித்துள்ளார்.

இதையும் படிங்க: சின்ன தப்பு கூட நடக்க கூடாது!! விஜய் போட்ட பக்கா ப்ளான்!! தவெகவில் களமிறங்கும் முன்னாள் அதிகாரிகள்!!

தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட வாரியாக தேர்தல் கண்காணிப்பாளர்களை விஜய் நியமித்துள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக, இந்த நியமனங்கள் தவெகவின் தேர்தல் தயாரிப்புகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன. 

இதையும் படிங்க: எனக்குனே வருவீங்களா?... தவெகவுக்கு செங்கோட்டையானால் வந்த சிக்கல்... பள்ளி மாணவர்களால் பஞ்சராகும் விஜய் இமேஜ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share