×
 

திக்கு திக்குன்னு இருக்கோ? முதல்வர் அறிவிப்புக்கு விசில் சத்தம் தான் காரணம்... விஜய் விமர்சனம்..!

மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த முதல்வர் அறிவிப்பை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டு மகளிருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது மாதம் ரூ.1,000 பெற்று வரும் பெண்களுக்கு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதாவது திராவிட மாடல் அரசு 2.0-இல் இந்தத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று அவர் தெளிவாக வாக்குறுதி அளித்துள்ளார். இது மட்டுமல்ல, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை முன்பணமாக ரூ.3,000-ஐயும், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக மேலும் ரூ.2,000-ஐயும் சேர்த்து, மொத்தம் ரூ.5,000-ஐ இன்று காலையிலேயே 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துவிட்டார். 

புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி என்றும் இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன எனவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார். வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான் என்றும் குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்தார். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி என்றும் அது மட்டுமா., இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது... கண்டிஷன் போட்ட கவுன்சிலர்..! குக்கர்ல விசில் அடிக்கலாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்து இருப்பதாகவும் விமர்சித்தார். விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி என்றும் கூறினார். 

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை? எங்களுக்கு எந்த சம்மதமும் இல்ல... போலீசை கைகாட்டிய கிரிக்கெட் வாரியம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share