#BREAKING: விசில் போடு..! பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பு மனு ஏற்பு..!
பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், சென்னையின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தனது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இந்த நிகழ்வு, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தவெகவின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவித்த பின்னர், பெரம்பூரில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்த நிகழ்ச்சி, அவரது அரசியல் அறிமுகத்தின் முக்கியமான தருணமாகப் பார்க்கப்பட்டது.
தவெக தலைவராக விஜய், இந்தத் தேர்தலில் தனது கட்சியின் முதல் வேட்பாளராகவே பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்தார். பெரம்பூர், வட சென்னையின் முக்கிய தொழில்துறைப் பகுதியாக அறியப்படுகிறது. பெரம்பூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருக்கும் டி.எம்.கே.வின் ஆர்.டி. சேகர் அவருக்கு எதிராகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் களமிறங்கும் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு மீதான பரிசீலனை தொடங்கியது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் விஜய் களம்பிறங்கும் பெரம்பூர் தொகுதியில் தான் அதிக அளவில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இதையும் படிங்க: வில்லிவாக்கத்தில் வெற்றி உறுதி...! தவெக வாகைச் சூடும்... ஆதவ் நம்பிக்கை..!!
இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் விஜயின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. பலமுறை திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்ட விஜயின் வேட்பு மனு இயக்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?