×
 

தீயாய் வேலையை ஆரம்பித்த விஜய்... தவெக மருத்துவர் அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..!

தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கட்சி மருத்துவர் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பாளர்கள் பற்றிய விவரம்:

மாநில மருத்துவர் அணி நிர்வாகிகள்:

ஒருங்கிணைப்பாளர் : Dr. T. சரவணன் MDS, MBA, MMSc, GHD.,

இணை ஒருங்கிணைப்பாளர்கள்:

Dr. K. விஷ்ணு MBBS
Dr. M.S. ரவி MD DM Cardiology
Dr. A.அருஷ் பிரசாத் MBBS, D Ortho, FAP
Dr. S. நரேஷ் MBBS MS
Dr. S.அரவிந்த் MBBS MD
Dr. T. பிரிதீங்கா BDS MBA
Dr. S. கார்த்திக் MBBS MD
Dr.சித்தர் பாண்டியன் MBBS DLO
Dr. M. மணிமேகலை MBBS. FDM. FPCC
Dr. M.ஹரி M.Sc Psychologist., MSW
Dr. C. ஜெகதா BDS LIII
Dr.சினோரா P.S. மோஹித் BDS., FDs., MBA
Dr. C. தமிழினியன் MBBS., FDM., FPCC..
Dr. C. விவேக் பாண்டியன் B.D.S.M.D.S.

இதையும் படிங்க: தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!


கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள், கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி. கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திராவிடம்னா என்ன? ஐடியா இல்ல SKIP பண்ணிடுங்க! பல்பு வாங்கிய இன்ஸ்டா புரட்சியாளர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share