×
 

ரூட்டை மாற்றிய விஜய்… சேலத்துக்கு வரலையாம்… எந்த மாவட்டத்துக்கு போறார் தெரியுமா?

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் கரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்  தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது. முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார். 

அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றினார். இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் தனது அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றின் திருப்புமுனையாக அலைகடலென மக்கள் குவிந்தனர். 

இதையும் படிங்க: அணில் போல… செல்லூர் ராஜு பேசுறது எங்கயோ இடிக்குதே!

மூக்கு மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடாமல் போனது. திருச்சியை தொடர்ந்து அரியலூரில் மக்கள் மத்தியில் விதை உரை நிகழ்த்தினார். விஜயை காணும் பூரிப்பில் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர். இதனையடுத்து, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் நடத்தினார். அடுத்து சேலத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சேலத்திற்கு பதிலாக அவர் கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நம்மள பாத்தாலே நடுங்குறாங்க... நம்ம ஆட்டம் தான் இனி! விஜய் அறைகூவல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share