சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த விஜய்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!
மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இப்போ உங்களுக்கு சின்னதா ஒரு சர்ப்ரைஸ் நம்ம கட்சியினுடைய வேட்பாளர் பட்டியலை இப்போது அறிவிக்க போறேன். மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய், “இன்னும் முடிக்கல... இன்னும் முடிக்கல... ஒரு நிமிஷம் இன்னும் முடிக்கல...” மதுரை மேற்கு வேட்பாளர் விஜய், மதுரை மத்தியத் தொகுதி வேட்பாளர் விஜய், மதுரை தெற்கு வேட்பாளர் விஜய், மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் விஜய், மேலூர் விஜய், சோழவந்தான் விஜய், திருப்பரங்குன்றம் விஜய், திருமங்கலம் விஜய், உசிலம்பட்டி விஜய்.
என்னடா எல்லா தொகுதியிலயும் ஒரே வேட்பாளர்னு பார்கறீங்களா? 234 தொகுதியிலயும் இந்த விஜய் தான் அதாவது உங்க விஜய் தான், உங்க சின்னம். இன்னும் சிம்பிளா சொல்லணும்னா உங்க வீட்டில இருக்கிற ஒருத்தர் தான் வேட்பாளரா நிக்க போறாங்க. அந்த வேட்பாளரும் நானும் வேறு வேறு இல்லை. நீங்க அவருக்கு ஓட்டு போட்டீங்கன்னா, எனக்கு ஓட்டு போட்ட மாதிரி.
இந்த முகத்துக்காக நீங்க ஓட்டு போட்டீங்கன்னா உங்க வீட்டில இருக்கிற உங்களுடைய வேட்பாளர் ஜெயிச்ச மாதிரி. என்னடா இவர் ஏதோ ஓவரா சொல்றாரு நினைக்க வேணாம். எதார்த்தம் அப்படிதான் இருக்கும் அப்படிதான் இருக்கணும். நீங்களும் அப்படிதான் நினைப்பீங்கன்னு நான் நம்புறேன். ஏன்னா இது நம்மள விட நம்ம எதிரிகளுக்கு இன்னும் நல்லாவே தெரியும்.
இதையும் படிங்க: தம்பியே வா! தலைமை ஏற்க வா... வாங்க விஜய் பாத்துக்கலாம்! ஆதவ் அர்ஜுனா ஃபயர் ஸ்பீச்
அதனால் எல்லா அதிகார பலத்தையும் நமக்கு எதிராக தூக்கிட்டு வந்துருவாங்க, வரட்டும் பாத்துக்கலாம் என்றார்.
இதையும் படிங்க: வேலை வெட்டி இல்ல போல! மீண்டும் மீண்டும் விஜயை சீண்டும் சீமான்..!