×
 

புயலுக்கும் பூகம்பத்துக்கும் மத்தியில் சுனாமியாய் களமிறங்கும் விஜய்... அதிமுக-திமுக கொத்தளத்தை தகர்க்க தவெக வியூகம்...!

வி ஃபார் வெற்றி அப்படிங்கிற பார்முலா படி விஜய் வேளச்சேரி தொகுதியில் களமிறங்குறதா பேசப்பட்டுக்கிட்டு வருது. 

தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை , வேட்பாளர்கள் தேர்வு என தமிழக சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பிச்சியிருக்கு. திமுக, அதிமுக அளவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தோட வேட்பாளர்கள் அறிவிப்புக்கும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. குறிப்பாக தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் களமிறங்கப்போறாருங்கிறது மிகப்பெரிய கேள்விக்குறியா இருக்கு. ஏற்கனவே வி ஃபார் வெற்றி அப்படிங்கிற பார்முலா படி விஜய் வேளச்சேரி தொகுதியில் களமிறங்குறதா பேசப்பட்டுக்கிட்டு வருது. 

தற்போது ராகுல் காந்தி பாணியில் இரண்டு தொகுதிகளை விஜய் டிக் அடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று வேளச்சேரி என்றும், மற்றொரு தொகுதி திருச்சி கிழக்கு என்றும் சொல்லப்படுது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது இத்தொகுதியில் சுமார் 2.55 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 2024–2025 நிலவரப்படி வாக்காளர் எண்ணிக்கை 2.60 லட்சத்திற்கு மேல் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. 

திருச்சி கிழக்கு தொகுதி நீண்ட காலமாக அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் தொகுதியாக இருந்து வருகிறது. 200 2016- ம் ஆண்டு வெல்லமண்டி நடராஜன் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் இனிகோ எஸ். இருதயராஜ் 94 ஆயிரத்து 302 வாக்குகள் பெற்று 54.56 சதவீதத்துடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வெல்லமண்டி என். நடராஜன் 40,505 வாக்குகள் பெற்றார். வித்தியாசம் 53,797 வாக்குகள் ஆகும்.  

இதையும் படிங்க: விஜய்க்கு ரஜினி தான் உதாரணம்..! ரசிகர் மன்றம் பிரச்சாரம் செய்யாது... போட்டு தாக்கிய அண்ணாமலை..!

இந்த தொகுதி சிறியதாக இருந்தாலும், மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட பகுதியாகும். கிறிஸ்துவர்கள் 60 ஆயிரம், இஸ்லாமியர்கள் 40 ஆயிரம் என சிறுபான்மையினர் வாக்குகளும், அதிக அளவிலான இளைஞர்களின் வாக்குகளையும் கொண்ட தொகுதி என்பதால் திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இனிகோ இருதயராஜ் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மீண்டும் கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கூட்டணி சார்பில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மருத்துவர் ரொகையா போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். அதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதிமுக அமைப்பு செயலாளர் , முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். தற்போது உள்ள மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். முன்னாள் துணை மேயர் சீனிவாசன் மற்றும் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் திருச்சி கிழக்கு தொகுதியில் வசித்து வருகின்றனர். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் களமிறங்கினால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: விஜய் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி..! நுழைவு சீட்டு இல்லைனா வராதீங்க..! கட்சித் தலைமை கறார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share