உங்க விஜய் நா வரேன்... சேலத்தில் பிரச்சார நிகழ்ச்சி... தொண்டர்கள் செம்ம குஷி..!
சேலத்தில் விஜய் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
இன்று சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது மக்கள் சந்திப்பு என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், காவல்துறையின் அனுமதியின்படி 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடல் அல்லது KVP கார்டன் என்ற இடத்தில் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். விஜய் சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் சேலத்துக்கு வருகிறார். கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக உள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தின் பின்னணியில், QR கோடு பதிக்கப்பட்ட நுழைவுச் சீட்டு இல்லாமல் யாருக்கும் அனுமதி இல்லை. பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “பொதுக்கூட்டம் இல்ல, விஜய் கிளாமரைக் காட்டும் கூட்டம்”... தவெகவை ஒரே போடாய் போட்ட பொள்ளாச்சி ஜெயராமன்...!
இந்தக் கூட்டத்தில் விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், கட்சியின் கொள்கைகள், மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தி, 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பார். சேலம் மாவட்டத்தில் தவெகவினர் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!