டெல்லிக்கு வர முடியாது?... அமித் ஷாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த விஜய்... காற்றில் பறந்த சிபிஐ சம்மன்...!
தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரத்தில் முதலில் தமிழ்நாடு அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசார்ணை நடத்தி வந்தது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மறுபடியும் நேரயில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த வருஷம் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டம் நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரத்தில் முதலில் தமிழ்நாடு அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசார்ணை நடத்தி வந்தது.
இது பத்தி விசாரிக்க முதல்ல தமிழக அரசு மூலமா தனிநபர் ஆணயம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கு எதிராக தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு கண்காணிப்பில் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக முதலில் தாவேக்காவுட நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டவர்களிடம் டெல்லியில வைத்து சிபிஐ விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் பெருந்துயரம்... தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்..!! சிபிஐ அதிரடி..!!
இரண்டாவது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அளித்துள்ள நிலையில், விஜய் டெல்லி செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் களமிறங்க விருப்ப மனு கொடுத்தவர்களிடம் விஜய் இன்று முதல் நேர்காணல் நடத்துகிறார். இதற்காக பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு நேர்காணல் தொடங்குகிறது. முதல் நாள் நேர்காணலில் யார் யார் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து ஈமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அஜித் குமார் கொலை வழக்கு... விசாரணை தீவிரம்... போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்..!