அறிவு இருக்குறவங்கள அனுப்பனும்... அரசியல் சினிமா டயலாக் இல்ல.. விஜய் மீது ரஞ்சனா தாக்கு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தை ரஞ்சனா விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வழிகாட்டுதலின் கீழ், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம் தற்போதைய தமிழக அரசின் சில முக்கிய தோல்விகள் மற்றும் தவறுகளை கண்டிப்பதாகும்.
குறிப்பாக, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ரஞ்சனா நாச்சியார் விமர்சனம் செய்துள்ளார். ஒரு அரசியல் கட்சித் தலைவர் தன்னைச் சுற்றி அறிவுடையவர்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அரசியல் என்பது சினிமா வசனம் அல்ல., பொறுப்புடன் பேச வேண்டிய மேடை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!
முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்குபெற வேண்டும் என்றும் இல்லையேல் சரியான அரசியல் அறிவு உள்ளவர்களை அனுப்ப வேண்டும் எனவும் கூறினார். கடின உழைப்பு இன்றி முதலமைச்சர் கனவு என்பது எட்டா கனியே எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினியை மிரட்டிய "திமுக குடும்பம்"... ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு..!!