×
 

ஆதவ் அர்ஜுனா விட்ட வார்த்தை.. பறந்த ஃபோன் கால்.. இபிஎஸ்ஸிடம் விஜய் சொன்னது என்ன..?

இபிஎஸ் மற்றும் அண்ணாமலை குறித்து பேசிய விவகாரத்தில், ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் தவெக தலைவர் விஜய் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஆதவ் அர்ஜூனாவும், புஸ்ஸி ஆனந்தும் நடந்த படி பேசி செல்கின்றனர். அப்போது எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை, பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து கழற்றி விடும் என்று தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகிறார். மேலும் அண்ணாமலை 10 பேரை வெச்சிட்டு 20%, 19 % ஓட்டு வாங்குவாறாமா? என சிரித்தபடி கிண்டலாக பேசிய காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்த பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவித்துள்ளார். உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிங்க: மீளா துயரத்திற்கு மக்கள் செல்வார்கள்.. புதிய விதிகளை திரும்ப பெறுக.. ரிசர்வ் வங்கிக்கு விஜய் வலியுறுத்தல்..!

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே  நான் எடுத்துக்கொள்கிறேன். அந்த வகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் அதிமுக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் தவெக தலைவர் விஜய் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்ட நிலையில், அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. 

 
 

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? திடீர் சந்தேகம் கிளப்பும் திருமாவளவன்.. விஜய் வியூகம் குறித்தும் ஓபன் டாக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share