ரூட்டை மாற்றிய விஜய்... தவெக சுற்றுப்பயண திட்டத்தில் அதிரடி மாற்றம் - வெளியானது முக்கிய தகவல்...!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் அரசியல் சுற்றுப்பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் அரசியல் சுற்றுப்பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 27-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தற்போது அந்தப் பயணம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 13-ம் தேதி நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். இந்தத் தேதி மாற்றப்பட்டு, இப்போது வரும் 27-ம் தேதி பயணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 27ஆம் தேதி வடசென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. 27ஆம் தேதி வடசென்னையில் முல்லைநகர், அகரம், ராயபுரம், புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை, ஹைஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு, டி நகர், எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், கண்ணகி நகர், ஆலந்தூர், வேளச்சேரி வில்லிவாக்கம், ஐனாபுரம், அம்பத்தூர், மதுவரவாயல் பகுதிகளல் மக்கள் சந்திப்பு மேற்கொள்ள விஜய் திட்டமிடப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில சென்னை கமிஷனர் அலுவலகத்தில அதற்கான மனுவும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தேதியில் மழை வரும் மற்றும் அனுமதிக்கான நேரம் மாற்ற சொல்லி போலீசார் அறிவுறுத்தக்கூடிய நிலையில் தான் அந்த நாளில் சுற்று பயணத்தை தவிர்க்காமல் வேறு ஒரு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாளை விஜய் பிரச்சாரம்... நாகையில் காவல்துறை விதித்த 20 கட்டுப்பாடுகள் என்னென்ன?
டிசம்பர் 13 ஆம் தேதி சேலம் நாமக்கல் மாவட்டங்களல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், திடீரன தேதி மாற்றப்பட்டு நாமக்கல் மற்றும் சேலத்தில நான்கு இடங்களில் மக்களை சந்திக்கவும், இதில் இரண்டு இடங்களில் விஜய் உரையாற்றவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் சேலத்தில் விஜய் மக்களை சந்திக்க இருக்கிறார். இதற்கு முன்னதாகவே அனுமதி அளிக்கக்கோரி ஒரு முழு லிஸ்டையுமே டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டு டிசம்பர் 20ஆம்தேதி வரை இந்த சுற்று பயணத்துக்கான மொத்த பட்டியலையுமே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய சூழல்ல அது ஒரு நாளுக்கு மூன்று மாவட்டங்கள்ல் சுற்று பயணம் மேற்கொள்வதாக அந்த பட்டியல் இருந்தது.
அந்த ஒரு நாளில் மூன்று மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால இரண்டு மாவட்டங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான பட்டியலும் தற்பொழுது புதிதாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தான் மூன்றாவது சந்திப்பு வடசென்னை, திருவள்ளூரை தவிர்த்து சேலம் நாமக்கல்லில் மக்களை சந்திப்பதற்கான திட்டமிடல் தயார் நிலையில் இருக்கிறது. அதற்கான அனுமதி கடிதமும் காவல் துறையிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: அடப்பாவிகளா? தவெக கட்சிக்கொடியில் திடீர் கலர் மாற்றம்... விஜய்க்கு பேரதிர்ச்சி கொடுத்த நாகை நிர்வாகிகள்...!