மாவட்ட வாரியாக அடித்து தூக்கிய தவெக... சரிந்த பெரும் தலைகள்... வெளிவந்த பகீர் பட்டியல்..!!
இந்த நிலவரங்களைப் பொருத்தவரை, தவெகவின்எழுச்சி திமுகவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட முடிவுகள் காட்டுகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலின் முன்னிலை நிலவரங்கள் மாவட்ட வாரியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறையும் கடுமையான போட்டி நிலவினாலும், சில இடங்களில் அதிமுக தனது நிலையைத் தக்க வைத்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் ஆறு தொகுதிகள் உள்ள நிலையில், மூன்று தொகுதிகளில் அதிமுகவும், மூன்று தொகுதிகளில் தவெகவும் முன்னிலையில் உள்ளன. இங்கு திமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 2021 தேர்தலில் போலவே, ஐந்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது.
இதையும் படிங்க: #TNElectionResults2026..! ஜெயக்குமார் தொடர்ந்து பின்னடைவு..! TVK வேட்பாளர் தாமு முன்னிலை..!
விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் திமுக, நான்கு தொகுதிகளில் அதிமுக மற்றும் ஒரு தொகுதியில் தவெக முன்னிலையில் உள்ளன. கள்ளக்குறிச்சி பகுதியில் நான்கு தொகுதிகளில், இரண்டு இடங்களில் திமுக, ஒரு இடத்தில் அதிமுக மற்றும் ஒரு இடத்தில் தவெக முன்னிலை பெற்றுள்ளன.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மூன்று தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் ஆறு தொகுதிகளில், ஒரு தொகுதியில் திமுக, இரண்டு தொகுதிகளில் அதிமுக மற்றும் மூன்று தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில், தவெக மூன்று தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில், ஒரு தொகுதியில் திமுக, இரண்டு தொகுதிகளில் அதிமுக மற்றும் ஐந்து தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக மூன்று, அதிமுக மூன்று மற்றும் தவெக நான்கு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாரம்பரியமாக அதிமுக வலுவாக இருந்த கொங்கு மண்டலத்தில் தவெக கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டங்களில் தவெக இன்னும் முழுமையாக கணிசமான முன்னிலை பெறாத நிலை காணப்படுகிறது.
கரூர், திருச்சி போன்ற பகுதிகளிலும் முக்கிய மாற்றங்கள் காணப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் பல தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தவெக முன்னிலை வகிக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் 8 இடங்களில் தவெக முன்னிலைஒரு இடத்தில் அதிமுகவும், ஒரு இடத்தில் திமுகவும் முன்னிலையில் உள்ளது
கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கலவையான முன்னிலை நிலவரம் காணப்படுகிறது. மொத்தத்தில், கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பகுதிகளில் பல இடங்களில் இம்முறையும் அதிமுக தனது நிலையைத் தக்க வைத்துள்ளதுடன், சில இடங்களில் கூடுதல் முன்னேற்றமும் கண்டுள்ளது. அதேசமயம், தாவேக்கா புதிய பகுதிகளில் முன்னிலை பெற்று முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலவரங்களைப் பொருத்தவரை, தவெகவின்எழுச்சி திமுகவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட முடிவுகள் காட்டுகின்றன.
இதையும் படிங்க: #TNElectionResults2026: ஒற்றை ஆளாய் பிளாஸ்ட் செய்த விஜய்... 23 அமைச்சர்கள் ஷாக்... ஆடிப்போன அதிமுக, பாஜக...!