“கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!
பெட்டி பாமா 100.ல் ஒருவராக இருப்பார். திமுக வேட்பாளர் சுகன்யா வெற்றி பெற்றால் உங்களுக்கானவராக இருப்பார்.
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நொச்சி பாளையம் கிராமத்தில் திமுக தலைவர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக வேட்பாளர்
தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுபவர் கிடையாது. பெட்டி பாமா 100.ல் ஒருவராக இருப்பார். திமுக வேட்பாளர் சுகன்யா வெற்றி பெற்றால் உங்களுக்கானவராக இருப்பார்.
திமுக சாதனைகளை சொல்லி கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் ஆதரவுடன், சிலர் சொல்லாமல் சென்ற துரோகிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்கள். கட்சித் தலைவர்களுக்கு சோபாவும் எம்எல்ஏக்களுக்கு பெட்டியும் கொடுத்து வாங்கினார் முதலமைச்சர். பெட்டி பாமா பல்டி பாமாவாக உள்ளார். அந்தர்ப ல்டி அடித்துள்ளார். மக்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்து மீண்டும் தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளார்.
முதலமைச்சர் தாராபுரத்தில் நடித்து விட்டு சென்றுள்ளார். அமைச்சர் சொன்னதும் பெட்டி பாமா அழுகிறார். அவர் ஏன் அழ வேண்டும். அவருக்கு வாக்களித்த மக்கள் தான் அழ வேண்டும்.
இதையும் படிங்க: "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!
சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால் பாட்டு பாடுகிறார்கள் நாங்கள் என்ன எதிர் பாட்டா பாட முடியும்.? இன்னும் முதலமைச்சர் டான்ஸ் மட்டும் தான் ஆடவில்லை. பிடித்து வைத்த பிள்ளையார் போல் சட்டமன்றத்தில் முதல்வர் அமர்த்திருப்பார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில், 40 நிமிடங்கள் பேசினேன் 18 கேள்விகள் எழுப்பினேன். 500க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்திருக்கின்றன. போதை அதிகரித்துள்ளது என கேள்விகளை எழுப்பினேன்.
முதலமைச்சர் ஒடி விட்டார். ஓடுகாலி முதலமைச்சராக உள்ளார். அமைச்சர்களின் பெயர் கூட தெரியாது. பட்டப்பெயர் வைத்து தான்அழைக்கிறோம். பட்டிமன்ற அமைச்சர், ரீல்ஸ் அமைச்சர், முறுக்கு அமைச்சர், சங்கி அமைச்சர், உருட்டுகட்டை அமைச்சர், பவுடர் அமைச்சர், திருட்டு விசிடி அமைச்சர், திருட்டு லாட்டரி அமைச்சர்- இவர்களின் பட்ட பெயர் சொன்னால் தான்உங்களுக்கு தெரிகிறது.
இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். இந்த வெட்கம் கெட்ட ஆட்சியில் இரண்டு பேருக்குத்தான் போட்டி ஒன்று அரிவால் விட்டு இரண்டு மின்வெட்டு. முதலமைச்சரின் சொந்த தொகுதி பெரம்பூரில் மின்சாரம் கிடையாது மக்கள் மறியல் செய்து கொண்டிருக்கின்றனர் முதலமைச்சரின் தொகுதியிலேயே இந்த லட்சணம். அமைச்சர் நிகழ்ச்சிகளில் மின்வெட்டு உள்ளது.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்.
வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு 125 நாட்களாக உயர்த்தி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பத்து நாட்களுக்கு கூட வேலை தரப்படுவதில்லை அப்படியே தந்தாலும் உரிய ஊதியம் கொடுப்பதில்லை.. 100 நாள் வேலைக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன..
இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட தாராபுரம் மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து சுகன்யாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்..என்றார்..
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு..! ஆடவர் கிரிக்கெட்டில் தங்கம்..! வாஷிங்டன் சுந்தருக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!