×
 

#BREAKING: உதயநிதியை இன்றே விடுவிக்க ஆணை..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது முதலமைச்சர் விஜய்யை ‘டம்மி முதல்வர்’ எனக் குறிப்பிட்டு பேசினார். அதுமட்டுமில்லாத முதல்வர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கண்டனங்கள் வலுத்தன. இதைத்தொடர்ந்து போலீசார் உதயநிதி மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதிரடியாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

பிற்பகல் 12 மணி அளவில் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதுவரை கைது நடவடிக்கை கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் வெளியாகிய சிறிது நேரத்திலேயே உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் தமிழகத்தில் திமுகவினர் கொந்தளித்தனர்.

இதையும் படிங்க: குதிரை பேர வழக்கு..! விசாரணைக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை.! மத்திய, மாநில அரசுக்கு முக்கிய உத்தரவு..!

இதற்கிடையில், இன்று பிற்பகல் 2:15 மணியளவில் உதயநிதியின் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என ஹை கோர்ட் நீதிபதி ஜிகே இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார். விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் உதயநிதி விடுவிக்கப்படுவார் என அரசு தரப்பு கூறிய நிலையில் இன்றைய விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை சிறையில் அடைக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்தார். உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிரான மனுவை விசாரித்த ஹை கோர்ட் அவரை இன்றே விடுவிக்க உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.  

இதையும் படிங்க: முன்னாள் IAS அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..! டிஜிபிக்கு ஹை கோர்ட் அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share