×
 
☰

ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு! புழல் சிறையில் உதயநிதி - அன்பில் மகேஷ் மீண்டும் சந்திப்பு!

இரண்டாவது முறையாக இன்று காலை புழல் சிறைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் சந்தித்துப் பேசினார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.⁠

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.

இதையும் படிங்க: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!! மேலும் 4 நாட்கள் சிறை செல்லும் திமுக முன்னாள் அமைச்சர்!

சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு திங்கள்கிழமை இரவு ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷை நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அன்பில் மகேஷை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று காலை புழல் சிறைக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று விசாரித்த நீதிபதி, காவல்துறை தரப்பில் பதிலளிக்கக் கோரி விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.⁠

இதையும் படிங்க: பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share