×
 
☰

சென்னையில் இளைஞர்கள் கைது! பயந்து நடுங்குகிறார் முதலமைச்சர் விஜய்?! தவெக அரசை விளாசிய உதயநிதி ஸ்டாலின்!

ஜனநாயகத்தைப் பாதுகாக்க இளைஞர்கள் முன்வைக்கும் குரலை ஒடுக்குவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பெசன்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக இளைஞரணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடும் இளைஞர்களின் குரலை ஒடுக்குவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெசன்ட் நகரில் என்ன நடந்தது?

காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னையின் பெசன்ட் நகரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை (SIR) தொடர்பான தங்களது எதிர்ப்புகளைப் பரிசீலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓம் காளி... ஜெய் காளி! சிறுவனை வைத்து முதல்வர் விஜய்யை விமர்சிக்க வைத்த உதயநிதி? பாய்ந்தது வழக்கு!

விஜய் அரசுக்கு உதயநிதி கண்டனம்

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமைதியாகப் போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையைப் பயன்படுத்திக் கைது செய்ததாக தமிழக அரசைக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் இளைஞர்களின் போராட்டத்தை அரசு ஏன் ஒடுக்குகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி அரசியல் தலைமையின் அழுத்தத்தால் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்றும் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

“இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியாது!”

தொடர்ந்து, நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் அக்கறை கொண்ட இளைஞர்களைக் கைது செய்வதன் மூலம் அரசு தனது அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க இளைஞர்கள் முன்வைக்கும் குரலை ஒடுக்குவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் மோதல் தீவிரமடைகிறதா?

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரங்கள் தேசிய அளவில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் கட்சிகளிடையே புதிய கருத்து மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை, காவல்துறையின் நடவடிக்கை குறித்த விளக்கம் மற்றும் போராட்ட அமைப்புகளின் கோரிக்கைகள் தொடர்பாக அடுத்தகட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கவனிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: “ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது” - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share