"என் அரசியல் வாழ்க்கையின் பெருந்தவறு"... வைகோ ஓபன் டாக்..! திமுக மீது விமர்சனம்..!!
கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
தமிழக அரசியல் களத்தில் மதிமுக வின் பயணம் மற்றும் தன்னுடைய நிலைப்பாடு குறித்து தொண்டர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படுத்தியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளைக் கொடுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்ப்பந்தித்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டில் அதிமுகவுடனும், 2017-ல் திமுகவுடன் கூட்டணி வைத்து பெரும் தவறுகளைச் செய்துவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினர். கூட்டணியில் இருந்தபோது, அரசையோ, திமுகவையோ விமர்சித்திருந்தால் கூட்டணியில் இருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள் என்று தெரிவித்தார்.
2006ல் மதிமுக நிர்வாகிகளின் நிர்பந்தத்தால், ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக உடன் கூட்டணி சேர்ந்தது என் வாழ்க்கையில் முதல் பெருந்தவறு என்று கூறிய வைகோ, 2017ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழை என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் செங்கோட்டையனை திடீரென சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ... அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி!
பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் செய்துள்ளோம் என்றும் இனி நமக்கு எவ்வித கேடும், யாரும் செய்ய முடியாது எனவும் வைகோ கூறியுள்ளார். நான்கு தொகுதிகள் தான் என்று கூறியும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் தங்கள் மீது திணித்ததாக தெரிவித்தார். மதிமுக நிர்வாகிகள் தன்னை நிர்பந்தப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க வைத்ததாக கூறியுள்ளார். நிர்பந்தத்துக்கு உடன்படாமல் இருந்திருந்தால், அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் மதிமுக வலிமையும் பொலிவும் பெற்று இருக்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க: கூட்டுக் களவாணி பிளான் போட்டது நீங்க..!! கோடநாடு-ன்னா நடுங்குவீங்களே... இபிஎஸ்க்கு தவெக பதிலடி..!!