வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி! முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!
தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் ம.தி.மு.க., சேருவது குறித்து, பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.
சென்னை: தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகள் குறித்து பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து வைகோ கருத்து தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தில் தற்போதைய நிர்வாகம் வெளிப்படையாக செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்பதைக் வலியுறுத்துவதற்காக முதல்வரை சந்தித்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக விரிவான அறிக்கையையும் முதல்வரிடம் வழங்கியதாக கூறினார்.
அதேபோல், தனது நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்ட புத்தக வெளியீட்டு விழா தொடர்பாகவும் முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாக வைகோ தெரிவித்தார். டெல்லியில் நடைபெறவுள்ள அந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!
இதற்கிடையில், மதிமுக எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளுக்கும் வைகோ பதிலளித்தார். தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் மதிமுக இணையுமா என்ற கேள்விக்கு, தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மறுபுறம், மதிமுக தொடர்பான சில அரசியல் யூகங்களும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ நியமிக்கப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
முதல்வர் விஜய் - வைகோ சந்திப்பு, வரவிருக்கும் அரசியல் மாற்றங்களுக்கான முன்னோட்டமா அல்லது வழக்கமான ஆலோசனையா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு பல முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!