×
 

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக சிதறிக்கிடக்கிறது! தவெகவில் இணைந்த காரணம் அதுதான்! வளர்மதி ஓபன் டாக்!

இன்றைய தினம் அதிமுக பல்வேறு நிலைகளாக சிதறிக் கிடக்கிறது. அதற்கு காரணம் சரியான தலைமை இல்லாததே. அதனால் அதிமுகவை விட்டு நாங்கள் வந்து விட்டோம் என வளர்மதி விமர்சித்தார்.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரமாண்ட இணைப்பு விழாவில் அதிமுகவில் இருந்து விலகிய டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். அமைச்சர்கள் புச்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் நடைபெற்ற இந்த விழா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வளர்மதி, அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கடுமையாக விமர்சித்தார். “1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா கண்ணும் கருத்துமாக வழிநடத்தினார். ஆனால் இன்று அதிமுக பல்வேறு நிலைகளாக சிதறிக் கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சரியான தலைமை இல்லாததே” என்றார்.

அதனால்தான் அதிமுகவை விட்டு வெளியேறி தவெகவில் இணைந்ததாக வளர்மதி தெரிவித்தார். “தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், கடந்த 40 நாட்களில் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்த ஆட்சியைப் பார்த்து நாங்கள் இந்தக் கட்சியில் இணைய முடிவு செய்தோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

தங்கள் ஊர் மக்கள் இந்த மாற்றத்தை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் வளர்மதி நம்பிக்கை தெரிவித்தார். மாமல்லபுரம் இணைப்பு விழா தவெகவுக்கு புதிய பலத்தை அளித்துள்ளது. அதிமுகவில் இருந்து தொடர்ந்து வரும் இணைப்புகள் கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிகழ்வு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் தலைமையில் தவெக வளர்ச்சி அடைவதை அதிமுகவினர் ஏற்றுக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற இணைப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share