×
 

இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கப்படாமல் இருப்பதை வானதி சீனிவாசன் விமர்சித்து உள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யும் முறை அதிரடி படை தொடங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். அதற்காக தான் முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே கையெழுத்திட்டார். இந்த திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்க இருந்தது. தற்போது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நடக்கும் பல்வேறு குற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி இந்த அதிரடிப்படையை தொடங்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை துவங்க இன்னும் நல்ல நேரம் வரவில்லையா முதல்வரே என பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். திருச்சியில் 14 வயது சிறுமி வாடகைக் கார் ஓட்டுநரால் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகப் பெண்கள் இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இதுபோன்ற கயவர்கள் பிடியில் சிக்கி சீரழிவது என்று கேட்டுள்ளார். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை ஆரம்பிப்பதற்கு இன்னுமா நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தினந்தோறும் பெண்கள் படும்பாட்டை நீங்கள் அறிந்திருந்தும் அவர்களின் பாதுகாப்பிற்காக உங்கள் நடவடிக்கையை உடனடியாக தொடங்கியிருக்க வேண்டாமா என்று கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

காலம் தாழ்த்தி செயல்படுத்தப்படும் எந்த ஒவ்வொரு திட்டமும் அதற்குரிய பலனைத் தராது என்பதை முதலமைச்சர் உணரவேண்டும் என்றார். எனவே விரைவில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: 717 மதுக்கடைகள் மூடல் ஒரு நல்ல தொடக்கம்..!! CM விஜய்க்கு நன்றி.. வானதி சீனிவாசன் வரவேற்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share