×
 
☰

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

சட்டம் ஒழுங்கு நிலை குறித்து வானதி சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார். திருத்தணி பெரியார் நகரில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் பேசியபோது, தற்போதைய அரசின் கீழ் பெண்களுக்கும் புகார் அளிப்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.திருத்தணி பெரியார் நகரில் தனது 17 வயது மகளுக்கு காதல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் மீது மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன்பிறகு அந்த இளைஞர்கள் மாணவியின் தந்தையை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு வானதி சீனிவாசன், தவெக அரசின் ஆட்சியில் புகார் அளிப்பவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறினார். இத்தகைய நிலையில் பெண்களுக்கு இந்த அரசில் எவ்வாறு பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பெண்களைக் காப்பதற்காக சிங்கப் பெண் படை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் போன்ற அமைப்புகள் இருந்தபோதிலும், புகார்களை சரியாகக் கையாளாததால் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து மேலும் பல குற்றங்களைச் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அதேநேரம் புகார் கொடுத்தவர்கள் பயந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் நிலை ஏற்பட்டிருப்பதுதான் தவெக அரசின் சாதனை என்று வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: கனிம வளத்தை சுரண்டி கோடிக்கணக்கில் அபராதம்..! இதான் தூய ஆட்சியா விஜய்.? விளாசிய வானதி சீனிவாசன்.!

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று முதலமைச்சரை நோக்கி அவர் கருத்து தெரிவித்தார்.இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் மற்றும் அதற்கான கருத்துகள் மேலும் விவாதங்களைத் தூண்டியுள்ளன.

 

இதையும் படிங்க: பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்...! தமிழக EX. MLA வானதிக்கு ஆந்திராவில் பொறுப்பு.! தலைமை முக்கிய முடிவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share