×
 

திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

சிறுவாணி அணையில் நீரை தேக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விஷயத்தில் திமுக அலட்சியமாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தொழில் நகரான கோவையின் முக்கிய நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இதை கேரள மாநில அரசு பராமரிக்கிறது. அணையின் நீர்த்தேக்க அளவு 49.53 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.

தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 44.61 அடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால், நீர்மட்டம் 44 அடியை நெருங்கும் முன்பே, கேரள நீர்வளத்துறையினர்  தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.இதனால் அதிக மக்கள்தொகை கொண்ட கோவை மாநகரில், கோடைகாலங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் 44.61 அடி நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தமிழ்நாடு அரசின் கடமை.

இதையும் படிங்க: இது மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா? வானதி சீனிவாசன் ஆவேசம்!!

ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. சிறுவாணி அணையின் பராமரிப்புக்கு கேரள மாநில அரசு கேட்ட 5 கோடி ரூபாயை, தமிழ்நாடு அரசு இதுவரை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும், வளர்ந்த மாநிலம், தொழில் மாநிலம் என்ற அந்தஸ்தை தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தரும் கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விஷயத்தில்கூட திமுக இந்த அளவுக்கு அலட்சியமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு, சிறுவாணி அணையில், இப்போதைக்கு 44.61 அடி வரையாவது நீரை தேக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரள மாநில அரசுடன் பேச்சு நடத்தி, சிறுவாணி அணையில் 50 அடிவரை நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கோவை மக்கள் திமுக அரசை மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share