என்ன ஆச்சு...?? - தவெக புயலில் சிக்கித் தவிக்கும் திருமா... திடீரென வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தருவது தொடர்பாக இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தவிருந்த உயர்நிலைக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது. தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் மூலம் 5 சீட்டுகள் கிடைத்தாலும், மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுவதால் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தவெகவிற்கு மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதால், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகளுக்கும் ஆதரவு கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து விசிக திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், "தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டு எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இடதுசாரி கட்சிகளுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து நாளைக்கு எங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாட்டை பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. விஜய் நல்லாட்சி தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது. தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி எங்கள் நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்வோம். நிர்வாகிகளுடன் பேசினால் தான் அவர்களின் கருத்தை அறிய முடியும்” எனக்கூறியிருந்தார்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8ஆம் தேதி கூட்டம் நடத்துவதால் அன்றைய தினமே விசிக கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், நாளை இதுதொடர்பாக விசிக நடத்த இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!
இதையும் படிங்க: அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!