ஈழத்தமிழர்கள் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது வாயே திறக்காத விஜய்... இப்போ வெட்டித்தனமா பேசுறாரு... திருமா அட்டாக்...!
அவருக்கு வேறு எந்த வகையிலும் அரசோ, காவல்துறையோ நெருக்கடி தருவதாக எனக்கு தெரியவில்லை. சுதந்திரமாக பயணிக்கிறார், சுதந்திரமாக பேசுகிறார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விடுதலை சிறத்தல் கட்சிக்கு ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கும்போது இதே மாதிரிதான் கொடுப்பாங்க. இது ஒன்னும் புதுசு கிடையாது. அவருக்கு புதுசு. எங்களுக்கு 35 வருஷமா இது பழகி போச்சு. எந்த மாநாடு நடத்தினாலும், எந்த பேரணி நடத்தினாலும் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தாலும் காவல் துறையினர் வழக்கமாக தருகிற நிபந்தனைகள் தான் அவருக்கும் அளிக்கப்படுவதாக நான் நம்புகிறேன். அவருக்கு வேறு எந்த வகையிலும் அரசோ, காவல்துறையோ நெருக்கடி தருவதாக எனக்கு தெரியவில்லை. சுதந்திரமாக பயணிக்கிறார், சுதந்திரமாக பேசுகிறார்.
திமுக எதிர்ப்பு என்பதை விட திமுக வெறுப்பை விஜய் அரசியலாக பேசிக்கொண்டிருக்கிறார். எதிர்ப்பு என்பது வேறு, வெறுப்பு என்பது வேறு. அவர் தான் என்ன செய்ய போகிறோம்? என்பது குறித்த இதுவரை பேசியதாக தெரியவில்லை. திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை வெறுப்பு அரசியலாக முன்வைக்கிறார். வெறுப்பு அரசியல் மக்களிடத்தில் பெரிதும் எடுபடாது. ஆகவே அவருடைய செயல் திட்டங்கள், எதிர்கால களப்பணிகள் ஆகியவை குறித்து விஜய் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடத்திலே இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் தீனி போடுவதாக தெரியவில்லை.
நாகப்பட்டினத்தில் ஏழு தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தாய் பாசம் கொண்ட தலைவனை இழந்து தவிக்கிற ஈழ தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் அப்படின்ற கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ஈழத்தமிழர்கள் பிரச்சனை உச்சத்திலே இருந்த காலத்தில் அவர் வாய் திறந்து எதுவும் பேசியதாக தெரியவில்லை. அப்படி ஒரு கருத்து அவரிடத்திலே இருந்ததா? என்றும் தெரியவில்லை.
இதையும் படிங்க: பாஜக கொள்கை எதிரினா காங்கிரஸ் கொள்கை நண்பனா? சீமான் சரமாரி கேள்வி...!
35 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஈழ தமிழர்களுக்காக எண்ணற்ற பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன, பேரணிகள் நடந்திருக்கின்ற. விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் கணக்கில் அடங்காதவை. இன்றைக்கு ஈழத்தமிழர்கள் பற்றி பரிதாபமாக காட்டிக் கொள்கிற முயற்சி வெறும் அரசியலுக்கானது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. இந்த உணர்வு உண்மையான உணர்வாக இருந்திருக்குமேயானால், அப்போதே அது வெளிப்பட்டிருக்க வேண்டும். அப்படி வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை என விஜய்யை மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: “நாங்க மட்டும் கரண்ட் கட் பண்ணலைனா ‘அணில் குஞ்சுங்க’ பொசுங்கி இருக்கும்”... விஜயை வச்சி செய்த தமிழன் பிரசன்னா...!