×
 

திருவள்ளுவரை வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி போட்ட மாஸ்டர் பிளான்... டென்ஷனான திருமாவளவன்..!

ஆளுநர் ஆர்.என்  ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். 

திருக்குறள், திருவள்ளுவர் நந்தனர் என தமிழ் புலவர். அறிஞர்களை எல்லாம் பேசி சனாதானத்திற்கு ஆதரவான  புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த நினைக்கும் R.S.S ஆதரவாளர்  ஆளுநர் ஆர்.என்  ரவியின் மாயாஜால வித்தையை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

 

தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இதே அமித்ஷா தான் ஒடிசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர் ஒருவர் முதல்வராகிவிடக்கூடாது என்பதில் உறுதி காட்டியவர் எனக்கூறிய திருமா, மதவாதத்திற்கு எதிரான ஜனநாயக கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது மட்டும்தான் விசிக வின் தற்போதைய நிலைப்பாடு என்றார். 

இதையும் படிங்க: இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் லீடர்! யாராலும் அசைக்க முடியாது...முதல்வர் பெருமிதம்!

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று மோடி ,அமித்ஷா இருவரும் பேசி வருவது மற்ற அரசியல் கட்சிகளை கூட்டணிக்கு கொண்டுவர கூறும் ஆசை வார்த்தைகள். எடப்பாடி பழனிச்சாமி வாயிலிருந்து கூட்டணி ஆட்சி என்ற வார்த்தை இதுவரை வரவில்லை என பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தப்போது கூறினார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறள் ஒரு ஆன்மீக புத்தகம். 'முக்தி' பற்றி பேசவில்லை என கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மீகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள். நாம் யார் என்பதை இன்றைக்கு வெளியிட்ட புத்தகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தகைய சிந்தனையை நமக்கு கல்வி பாடத்திட்டங்கள் கொடுக்கவில்லை. பாரத தேசம் ஒரு ஆன்மீக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என்று பேசியிருந்தது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது திருமாவளவன் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். 

இதையும் படிங்க: டெல்லி அரசியலில் கால் பதிக்கிறார் கமல்.. ஆறு பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share