இரட்டை இலைக்கு ஒரு ஓட்டு கூட போட்டுறாதீங்க; மீறி போட்டீங்கன்னா... திருமாவளவன் எச்சரிக்கை...!
அதிமுக நூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலை பாஜக தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும்
தற்போதுள்ள அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுக இல்லை மோடி கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்தில் ஆட்டத்தை கலைத்து பாஜகவினர் முதலமைச்சர் ஆவார்கள்: அதிமுக நூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு அரசியலை பாஜக தலைகீழாக புரட்டிப் போட்டுவிடும்: வானூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேச்சு:
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கெளதம் திராவிடமணியை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் உரையாற்றுகையில், இரட்டை இலைக்கு வாக்கு அளித்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கு வாக்களித்ததாகும். தற்போதுள்ள இரட்டை இலை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இரட்டை இலை இல்லை. இது மோடியிடம் அடகு வைக்கப்பட்ட இரட்டை இலை.
விசிக, திமுக கூட்டணியில் இனைந்ததால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றோம். அதனால் தான் அங்கீகாரம் பெற்றோம். திமுக இரண்டு தொகுதி கொடுத்தார்கள் என்றால் நம்முடைய வாக்கு அவர்களுக்கு கிடைக்கிறது என்பதால். இது தான் கூட்டணி கணக்கு. நம்ம ஓட்டு அவர்களுக்கு, அவர்கள் ஓட்டு நமக்கு. வானூரில் கெளதம் திராவிடமணி ஐம்பதாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற வேண்டும்.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட மறுத்தது! ஏமாளித்தனமா? அரசியல் தெளிவா? திருமாவளவன் விளக்கம்!!
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்தில் ஆட்டத்தை கலைத்து பாஜகவினர்தான் முதலமைச்சராக வருவார்கள். 100 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்றால் தமிழ்நாட்ட அரசியலை புரட்டி போட்டுவிடும் பாஜக. ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவோ, எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவோ இல்லை. தற்போதுள்ள அதிமுக மோடி கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக. அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டில் பாஜகவை வளப்படுத்த தான் பயன்படும்.
தமிழ்நாட்டில் அதிமுகவை பலவீனப்படுத்த போவது விசிகவோ, திமுகவோ அல்ல. அதிமுகவை வீழ்த்தப்போவது பாஜக தான். அதிமுக தொண்டர்களே உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள். இந்த நல்லாட்சி தொடர சூரியனுக்கு வாக்களியுங்கள். இந்தியாவிலேயே பாஜக ஒரு சராசரி அரசியல் கட்சி அல்ல. மதவெறியை தூண்டும் கட்சி. சாதி வெறியை தூண்டும் கட்சி. சமூக நீதிக்கு எதிரான கட்சி. பாஜக வளர்வது தேசத்திற்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. எட்டு சீட்டுக்காக, இரண்டு நாடாளுமன்ற தொகுதிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. பாஜக போன்ற நச்சு சக்திகள் தமிழ்நாட்டில் வளர விடாமல் தடுக்க வேண்டுமானால் திமுகவோடு கைகோர்த்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பேசினார்.
இதையும் படிங்க: களமிறங்கும் பாமக பொது செயலாளர்! காட்டுமன்னார்கோயில் தொகுதியில் முரளி சங்கர் போட்டி!