“2 லட்சம், 3 லட்சம் தர்றேன்னு சொல்லுவாங்க... உள்ள விட்டுடாதீங்க” - பகீர் கிளப்பும் திருமாவளவன்...!
ம்ம பகுதியில் உள்ள கோவிலுக்கு 2 லட்சம் தருகிறேன் 3 லட்சம் தருகிறேன் லோன் வாங்கித் தருகிறேன் என்று யாராவது உள்ளே வந்தால் அவர்களை உள்ளே விடக்கூடாது எனக்கூறினார்.
திட்டக்குடி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனத் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: கிராமப்புறங்களில் ஆர் எஸ் எஸ், பாஜகவினர் ஊடுருவி நம்ம தாழ்த்தப்பட்ட மக்களை சிதறடிக்க பார்க்கின்றார்கள் அவர்கள் நம்ம பகுதியில் உள்ள கோவிலுக்கு 2 லட்சம் தருகிறேன் 3 லட்சம் தருகிறேன் லோன் வாங்கித் தருகிறேன் என்று யாராவது உள்ளே வந்தால் அவர்களை உள்ளே விடக்கூடாது எனக்கூறினார்.
நமது கட்சி திமுக கூட்டணியில் இருந்ததால் தான் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறி உள்ளது. நமது கட்சி அம்பேத்கர் பெரியார் கொள்கையின் அடிப்படையில் உருவான கட்சி இது சாதி கட்சி கிடையாது இது கொள்கையின் அடிப்படையில் உருவான கட்சி.
இப்போது தொடங்கப்பட்ட கட்சிகள் எல்லாம் 6:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்த மாட்டார்கள், பேச மாட்டார்கள். அதுவும் குறிப்பாக சனிக்கிழமை அன்று கூட்டம் போடுகிறார்கள். ஆனால் நமது கட்சி 365 நாட்களும் பொதுமக்களை சந்தித்து இரவு 12 மணி வரை மக்களை சந்தித்து பேசிட்டு வருகிறோம்.
இதையும் படிங்க: அவர் கூப்பிட்டப்ப வர முடியல! ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் உருக்கம்
திமுக கட்சி தான் கூட்டணி கட்சியாக செயல்பட்டு வருகிறது. அண்ணா திமுக கட்சி கூட்டணி சிதறி கிடக்கிறது. திமுக கூட்டணி தான் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: கூட்டம் வந்துட்டா ஆட்சி மாறிடுமா? விஜய் பிரச்சாரத்தை விளாசிய திருமா..!