×
 

செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது செய்தியாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு நழுவிச் சென்ற விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மலையரசன் மற்றும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு துணை தலைவரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் வளர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷின், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், நகராட்சி திட்டங்கள், தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் அரசின் திட்ட பணிகளில் நிலுவையில் உள்ள திட்டங்களில் அரசின் திட்ட தொகைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை தொடர்பான திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சமூக நீதித்துறை பெயர் மாற்றம் சரியே..! MP ரவிக்குமார் கருத்துக்கு அமைச்சர் வன்னியரசு பதில்..!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய 100 நாள் வேலை திட்டத்தில் நூறு நாட்கள் எங்கும் வேலை தர முடியவில்லை. 26 நாட்களுக்குத்தான் சராசரியாக கடந்தாண்டில் வேலை வழங்கப்பட்டுள்ளது.தற்போது ஒன்றிய அரசு அந்த திட்டத்தை மாற்றி வேறு பெயரில் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.

அதில் பெரும் அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 77 லட்சம் மனித சக்தி நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஆனால் இந்த ஆண்டு 54.45 லட்சம் மணி சக்தி நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் இந்த அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் இத்தகை செயலால் ஏழை எளிய குடும்பங்கள் 100 நாள் வேலையை பெற முடியாமல் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்ல உள்ளது குறித்த கேள்விக்கு, எந்தவிதமான பதிலையும் அளிக்காமல் செய்தியாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டவாறு நழுவி சென்றார்.

நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு தொடர்பான கேள்விக்கு, மத்திய அரசு நீட் தேர்வு தொடர்பாக அமைத்துள்ள உயர்மட்ட குழு என்பது ஒரு கண் துடைப்பிற்கான குழு என்றும்,மாணவர்களை ஏமாற்றுவதற்காக மத்திய அரசு இதெல்லாம் செய்து வருவதாகவும்,மாணவர்கள் அவ்வாறெல்லாம் ஏமாற மாட்டார்கள்.மாணவர்கள் நம்மை விட விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்,நிச்சயமாக இவர்கள் மாணவர்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்தார்கள் என்றால் இவர்கள்தான் ஏமாந்து போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய கவின் கொலை... ஓராண்டு நினைவு நாள்.. கவின் குடும்பத்தை சந்தித்த அமைச்சர் வன்னியரசு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share