“நடிகர் விஜய்க்கு கூட்டம் வரும்... ஓட்டு வருமா?”... தவெகவை டார் டாராக கிழித்த விசிக!
நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடுவது ஒரு வியப்பல்ல. அந்தக் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பதை தேர்தல் முடிந்த பிறகுதான் பார்க்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா கூட்டம் வருகிற 6 ஆம் தேதி சிதம்பரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மேடை அமைத்தல், பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார் இன்று சிதம்பரம் வந்தார். அவருடன் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்டோர் கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் ஒரு வியப்புக்கு உரியது அல்ல. அந்தக் கூட்டம் எல்லாம் ஒட்டாக மாறுமா என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரிய வரும். அந்தவிதத்திலே அது வாக்குகளாக மாறக்கூடிய வாய்ப்பு மிக குறைவாகத்தான் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். அவரால் பெரிய அளவிலே ஒரு தாக்கத்தை தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்த முடியாது என்று கருகிறோம். ஏனென்றால் தமிழ்நாடு அரசியல் என்பது கொள்கை சார்ந்த அரசியலாக இருக்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுடைய கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். அவருடைய கொள்கை என்ன என்பதில் யாருக்கும் தெளிவு இல்லை. எனவே தேர்தலில் பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் அதைப் பற்றி சொல்ல முடியும்.
இதையும் படிங்க: சாதியவாதிகளிடம் தோற்கும் ஸ்டாலின் அரசு.! திமுகவை உரசிப்பார்க்கும் விசிக..!
அவருக்கு கூட்டம் கூடுகிறதா இல்லையா என்பதை பார்த்து நாங்கள் முடிவு எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை வைத்துதான் நாங்கள் முடிவு எடுத்து இருக்கிறோம். அந்த வகையில் தலைவர் திருமாவளவன் அவர்கள், நாங்கள் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்பதை தெளிவாக அறிவித்து விட்டார். அதற்கு காரணம் தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டை சனாதன சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அந்த விதத்திலே இந்த 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் என்பது மிக முக்கியமான ஒரு தேர்தல். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சரவை சொல்லி இருக்கிறது. ஆனால் அது எப்போது தொடங்கப்படும். எப்போது முடிவடையும். என்று எதுவும் சொல்லப்படவில்லை. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பே எடுக்கவில்லை. இதையடுத்து 2031ல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டபோது 2031இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அதன்படி மகளிர் இட ஒதுக்கீடு கொடுப்போம் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.
மகளிர் இட ஒதுக்கீடு 2035 வாக்கில்தான் அமலாகும். அவர்கள் சொல்படி 2031ல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவார்கள். அப்படியானால் அப்போது ஒன்றிய அரசில் யார் பொறுப்பில் இருப்பார்கள் என்பது தெரியாது. தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா என்பது சந்தேகம். ஏனென்றால் இப்போதே அவர்கள் ஒரு மைனாரிட்டி அரசாங்கத்தைதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறினார்.
இதையும் படிங்க: கள்ளநோட்டு வழக்கில் திடீர் திருப்பம்; ஒரு மாசமா டிமிக்கி கொடுத்த EX விசிக நிர்வாகி.. தட்டித்தூக்கிய போலீஸ்!