“அமித் ஷா சொன்னா இபிஎஸ் கூட தவெகவில் இணைவார்” - ஒரே நேரத்தில் அதிமுக, பாஜக, தவெகவை பொளந்தெடுத்த ரவிக்குமார்...!
பாஜகவின் ஒரு கிளை அமைப்பு தான் தவெக கட்சி. அமித்ஷா கூறினால் எடப்பாடி பழனிச்சாமியை தவெகவில் இணைவார் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி சாத்தனூர் கிராமத்தில் ஒரு கோடி ரூபாய் அளவில் அமைக்கப்பட உள்ள பயிலரங்கம் மற்றும் நூலக கட்டிடத்திற்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அடிக்கல் நாட்டினார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்: செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் சேரப்போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்த்து அதிமுகவை ஒற்றுமை படுத்த வேண்டும் என அறிக்கைவிட்டார். எனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பிறகு அமித்ஷா தான் என்னை பேச சொன்னார் என கருத்து தெரிவித்திருந்தார். வரும் காலத்தில் தன்னை அமுத்ஷா தான் தவெக-வில் சேர சொன்னார் என்பதையும் வெளிப்படையாக கூறுவார்.
பாஜகவின் நாடகம் ஒவ்வொன்றாக தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. பாஜகவின் முதன்மையான நோக்கம் அதிமுகவை ஒழிப்பது. தவெக உருவான காலத்தில் இருந்து பாஜகவின் கிளை அமைப்பு என்றும் பாஜக கூறிதான் இந்த கட்சியை விஜய் உருவாக்கியுள்ளார் என்பதையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி வருகிறது. அது இன்றைக்கு நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் ஒரு கிளை அமைப்புதான் விஜய் நடத்துகிற கட்சி. சனாதன சக்திகளின் சதி வேலை கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது. அதனால்தான் திமுக தலைமையிலான அணியில் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கும். தேர்தலை சந்திக்கும் என கூறி வருகிறார். கூட்டணியில் சில இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல. தமிழ்நாட்டை சனாதன சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதுதான். சனாதன சக்திகளின் நாடகத்தில் ஒரு காட்சி தான் செங்கோட்டையன் தவெக-வில் இணைவது.
அதிமுகவை பலவீனப்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டை நிலைகுலைய வைக்க முடியாது. பாஜகவின் நோக்கம் அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாஜகவை கொண்டு வருவது. 2026 தேர்தலின் நோக்கம். 2031 தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்கான தயாரிப்பு பணி இது. இதில் எஸ்.ஐ.ஆர் பணியும் சேர்ந்துள்ளது. வரும் தேர்தலில் அதிமுக வெல்ல வேண்டும் என்பதை விட பாஜக அதிகாரிகளை வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். பீகாரில் நிதிஷ்குமாரை விட பாஜக அதிக இடங்களை வென்றுள்ளது. நிதிஷ்குமார் முதல்வர் என்றாலும் அங்கு பாஜகவின் திட்டங்கள் தான் செயல்படுத்தப்படுகின்றன. முக்கியமான துறைகள் எல்லாம் பாஜகவிடம் சென்று விட்டது. அது போன்ற ஒரு நிலையை இங்கு ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். அதிமுகவை இந்த தேர்தலோடு அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். அதிமுக சுத்தமாக தமிழ்நாட்டில் அழித்தொழிக்கப்படும் இதனை பாஜக செய்யும்.
இதையும் படிங்க: அவருக்கு அனுமதி குடுக்காதீங்க... விஜய் ரோடு ஷோ நடத்துவதை எதிர்த்து டிஜிபியிடம் மனு...!
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 90 விழுக்காடு படிவங்கள் தான் விநியோகிக்கப்பட்டுள்ளது 25ஆயிரத்து 500 படிவங்கள் விநியோகிக்க முடியவில்லை. கொடுத்த படிவங்களை திரும்ப பெறுவதிலும் சுனக்கம் ஏற்பட்டுள்ளது. 65 சதவீத படிவங்கள் தான் திரும்ப பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை அறிவிப்பு வந்துள்ளது. வரக்கூடிய வாரம் இயற்கை பேரிடர் எதிர்கொள்வதில் தான் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தும். எஸ்.ஐ.ஆர் பணி செய்ய முடியாத நிலை உள்ளது. டிசம்பர் 4க்குள் இலக்கை அடைய முடியாது. லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வாக்கை இழப்பார்கள். அதனால் தான் எஸ்.ஐ.ஆர் பணியை நிறுத்திவிட்டு தேர்தலுக்குப் பிறகு செய்யுங்கள் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.
தேர்தல் ஆணையம் ஒரு சர்வாதிகார அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையர் மீது எந்த வழக்கும் தொடுக்க முடியாது என்ற சட்டப் பாதுகாப்பை பாஜக வழங்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தை கையாளாக வைத்துக்கொண்டு தங்கள் திட்டத்தை நிறைவேற்றம் பார்ப்பது தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழப்பார்கள். வாக்குரிமை மற்றும் குடியுரிமை இல்லாதவர்களாக ஆக்கி தமிழ்நாட்டில் அகதிகளாக ஆக்குவது தான் பாஜகவின் திட்டம் நாட்டில் பூர்வ குடி மக்களை அகதிகளாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எஸ்.ஐ.ஆர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த திட்டம் மிக மிக கொடூரமான திட்டம்.
அதிமுகவில் செங்கோட்டையன் மூத்த தலைவர் என்றாலும் அவர் தனித்துவமான தலைவராக இருந்தது கிடையாது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பின்னால் போவார். தற்போது விஜய் பின்னர் சென்றுள்ளார். அவரது எதிர்காலத்தை கருதி முடிவெடுத்துள்ளார் செங்கோட்டையனுக்கு வேறு எந்த அக்கறையும் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அதிமுக மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக சமூக நீதி அரசியலுக்கே இது கேடுகாலம் பாஜக செய்கிற தில்லுமுல்லுகளை தமிழ்நாடு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அதற்கு தேர்தலில் சரியான பதில் அளிப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி கூட தவெக-வில் இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அமித்ஷா விஜய் கட்சியில் சேருங்கள் என்று சொன்னால் அதை எதிர்க்கிற துணிவு எடப்பாடி பழனிச்சாமி இல்லை எனக்கூறினார்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? போட்டி போடும் கட்சிகள்... செங்கோட்டையனுக்கு கூடும் மவுசு..!